Monday, September 22, 2014

படக்கிறுக்கன் PHILOSOPHIES 2 : பில்லா 2


தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல் நடந்து அதிலும் ஒரு சிலவைகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.. கவனத்தை ஈர்க்கின்றன.. பாராட்டும் பெறுகின்றன.. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..!

பில்லா 2 என்பது 2012 இல் வெளிந்த ஒரு தமிழ்த் திரைப்படம். அஜீத் குமார்  நடிக்கும் இப்படத்தை சக்ரி இயக்கியிருக்கிறார் . ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு Gangster ஆக  மாறினார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

படத்திற்கு மிகபெரிய பலம் இரா. முருகனின் வசனங்களே ஓரிரு வரிகளில், போட்டி நிறைந்த உலகில் வாழ்வதற்குத்  தேவையான தத்துவார்த்த சிந்தனைகளை பளிச் பஞ்ச் வசனங்களில் தெரிவித்துள்ளார்.  அவை எதார்த்தத்தை பிரதிபலிக்கும் பலம் பொருந்திய வசனங்களாகவே  திரைப்படம் முழுவதும்  வருகின்றன 

பில்லா 2 வில் பல இடங்களில் பளிச் சிந்தனைகளைப் புதைத்திருக்கும்  வசனமே படத்தின் நாயகன்.

அவற்றில் என்னை அதிகம் சிந்திக்க வைத்த பல வசனங்களில் சிலவைகள்
மட்டும். 






வசனம் 1:

"டேய்... என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், ஏன் ஒவ்வொரு நிமிஷமும் நானா செதுக்கினதுடா."

வசனம் 2:

என்னோட நண்பனா இருக்கிறதுக்கு தகுதி தேவ இல்ல, என் எதிரியா இருக்க தகுதி வேணும் 

வசனம் 3:

"தீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.... "வெற்றி", ஜெயிக்கிற வரைக்கும்  தீவிரவாதி, ஜெயிச்சிட்டாப்  போராளி." 

வசனம் 3:

"நாங்க அகதிங்க தான் ஆனா அநாத இல்லடா..." 

வசனம் 4:

"மத்தவங்களோட பயம் நம்மளோட பலம்."

 வசனம் 5:

"காலம் மாறிக்கிட்டிருக்கு அண்ணாச்சி காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மள நாமே மாத்திக்கணும்... இல்லேனா  நாம காணாமப்  போய்டுவோம்." 

வசனம் 6:

"அவன் சொன்ன டைம்முக்கு முன்னாடி போனா  முழுசா நம்பி வந்தோம்னு அலட்சியமா நெனச்சிக்குவான்.

பத்து நிமிஷம் லேட்டாப்  போனா பொறுப்பில்லாதவன்னு ஆயிடும், ஆனா சொன்ன டைம்முக்கு போனா நிச்சியமா முடிப்பான்னு நம்பிக்கை வரும்."

வசனம் 6:

"நல்லவங்கள கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம் ... கெட்டவங்கள ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்."

வசனம் 7:

"இதுவரைக்கும் காட்டி கொடுத்தவங்க எல்லாருமே கூட இருந்தவங்க தான்."

வசனம் 8:

"உட்காந்து வேல வாங்கிறவனுக்கும் தன்  உயிரப்  பணயம் வச்சு வேல செய்றவனுக்கும் நெறைய வித்யாசம் இருக்கு. "

வசனம் 9:

"அவன் எத்தனையோ வருஷமா இந்த business la இருக்கான், உன்ன வளர விடுவான்னு நீ நெனக்கிறிய?  

விடமாட்டான்...

அப்போ...? 

நாமளும் விடக் கூடாது"

 வசனம் 10:

"ஜெய்க்கிறதுக்கு ஆயிரம் எதிரியக்  கொல்லலாம் தப்பில்ல... 
ஆனா ஒரு துரோகிய உயிரோட விட்டா அது  பெரிய தப்பு." 

வசனம் 11:

"முதல் அடியில் நடுங்க வேண்டும், மறு அடியில் அடங்க வேண்டும், மீண்டு வந்தால் மீண்டும் அடி மறுபடி மரண அடி. "








0 comments:

Post a Comment