Saturday, November 9, 2013

படக்கிறுக்கன் PHILOSOPHIES - 1



தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல் நடந்து அதிலும் ஒரு சிலவைகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.. கவனத்தை ஈர்க்கின்றன.. பாராட்டும் பெறுகின்றன.. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..!

தமிழ் ரசனையை ஒருபடி உயர்த்தக்கூடிய இந்தப் படத்தை நீங்கள் தவறவிட்டால் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை தவறவிடுகிறீர்கள் என்று அர்த்தம்!

'மூடர் கூடம்' பல இடங்களில் பளிச் சிந்தனைகளைப் புதைத்திருக்கும் நவீனின் வசனமே படத்தின் நாயகன்!

அவற்றில் என்னை அதிகம் சிந்திக்க வைத்த பல வசனங்களில் சிலவைகள்
மட்டும். 




வசனம் 1:

"வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு. முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு, சக்கரம் சுத்திக்கிட்டே இருக்கு...

இந்த சுழற்சி நிக்கிற கடைசி நேரத்துல நாம திரும்பிப்பாத்து வந்ததோட பலன் என்ன, வாழ்ந்த வெறுமை என்னனு தேடுறோம். இந்த மரணம் நோக்கிய பயணத்துல முடிவ மட்டுமே, நம்ம ஒவ்வொரு செயலோட விளைவ மட்டுமே எதிர்நோக்கி பயணிக்கிற நாம, பயணம் தான் வாழ்க்கை அப்படிங்கிற உண்மைய மறந்திடுறோம்."

வசனம் 2:

"ஒருத்தன் கிட்ட இருந்து எடுக்கிறது மட்டும் திருட்டு இல்ல, ஒருத்தன எடுக்க விடாம பண்றதுக்கு பேரும் திருட்டு தான்."

வசனம் 3:

"இவனுங்க பாட்டுக்கு இவனுங்க கௌரவத்துக்காக நம்மளப் பத்தி கனவு கண்டு வெச்சுகிறாங்க. நமக்கு தெரிஞ்ச விதத்துல நம்மள வளரவிடாம, இவனுங்க ஆசைப்பட்ட விதத்துல நாமளும் வளர முடியாம கடைசியில நெஜமாலுமே உருப்படி இல்லாம போயிறோம்."

வசனம் 4:

"தமிழ் தெரியாத இங்கிலீஷ்காரன்கிட்ட தமிழ்ல பேசக் கூடாதுன்னு தெரிஞ்ச உனக்கு, இங்கிலீஷ் தெரியாத பச்சைத் தமிழன்கிட்ட இங்கிலீஷ் பேசக் கூடாதுன்னு ஏன்டா தெரியலை?"

வசனம் 5:

"இந்த பணம் காசு, சொகுசு வாழ்க்க இதெல்லாம் நம்ம நெத்தியில எழுதி வெக்கல. நமக்குன்னு என்ன எழுதி இருக்கோ அதத் தேடிப் போவோம்...

எட்டிக் குதிக்கிற நரிக்கெல்லாம், திராட்சப் பழம் கெடச்சிரும்னா எல்லா நரியும் எட்டி குதிக்க ஆரம்பிச்சிரும்.

எட்டி குதிக்கிற நரிக்கெல்லாம் திரட்ச பழம் கெடைக்காதுன்னு எனக்கும் தெரியும், ஆனா நான் திரட்ச பழம் கெடக்கிறதுல சந்தோஷப்படுறவன் இல்ல, நம்மால முடிஞ்ச வர எட்டி குதிச்சோம்னு நெனக்கிறதுல சந்தோஷப்படுறவன்."

வசனம் 6:

"எவனோ எழுதி வெச்சத வாழ்றதுக்கு நான் ஒண்ணும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் இல்ல. இது என்னோட வாழ்க்க இத நான் தான் எழுதிக்கிட்டு இருக்கேன்."

வசனம் 7:

"நான் சென்னைக்கு வரும் போது உங்க அப்பா பணத்தோட சேத்து இதையும் என் கிட்ட கொடுத்தாரு இத வெச்சு தான் நான் வாழ்கையில முன்னுக்கு வந்தேன். இடையில இத நான் தொலைச்சிட்டேன் அதான் இப்போ எல்லாத்தையும் எழந்திட்டு கஷ்டப்படுறேன். இப்போ எனக்கு அது மறுபடியும் கெடச்சிருக்கு.... நம்பிக்கை"

வசனம் 8:

"உன்னால எந்த ஒரு காரியத்தையும் சரியா செய்ய முடியும் அத மத்தவங்க நம்புறாங்களோ இல்லையோ, நீ மொத நம்பணும்..."

வசனம் 9:

"அப்போ ட்ரை பண்ணுங்க சென்ராயன்... 
எடுத்த உடனே எதையும் முடியாது, தெரியலன்னு சொல்லாதிங்க..."

வசனம் 10:

"வழி நம்ம முன்னாடிதான் இருக்கு... நாமதான் நடக்கணும்!"




0 comments:

Post a Comment