Saturday, December 15, 2012

பறைச்சியாவது ஏதடா?


பாடல் : 3

இயற்றியவர் : சிவவாக்கியர்  

சாதியக் கொடுமை, உயர்ந்த குடி தாழ்ந்த குடி என்னும் பாகுபாடு தீண்டாமை போன்ற செயல்கள்  அன்று தொட்டு இன்றும் தொடர்ந்து வருகிறது என்பதற்கு இந்த பாடலே உதாரணம்.



                 பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா ?
                 இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டுஇருக்குதோ?
                 பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ 
                 பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே!

அவன்  பறைச்சி என்றும் நீ பணக்காரன் என்றும் நீ பிறக்கும் போதே உன் தோளிலும் எலும்பிலும் பதிந்து இருக்குதோ? பறைச்சி உடம்பு வேறாகவும் உன் உடம்பு வேறாகவும் உள்ளதோ. உயர்ந்த குடி தாழ்ந்த குடி என்று உண்மையில் ஏதும் இல்லை அதை பகுத்து பார்த்து உணர வேண்டியது நீரே !!! 



6 comments:

  1. பனத்தி என்பது பார்ப்பனத்தி என்பதன் சுருக்கமாகும். பறைச்சி தாழ்வு பார்ப்பனத்தி உயர்வு என்பதைக்குறிக்க வந்தது அது, டண்ணகர ண போட்டு பணக்காரி என்று திரிப்பது யோக்கியத்தன்மை அல்ல.

    ReplyDelete
    Replies
    1. இந்த விளக்கத்தை கொடுக்க அஞ்சுகின்றனர்.

      Delete
    2. உண்மை
      சித்தர்கள் உண்மையானவர்கள்
      வணங்குகிறேன்

      Delete
    3. தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..வணங்குகிறேன் 🙏

      Delete
  2. https://youtu.be/2DPYNnRmPU0
    பனத்தி = பார்ப்பனத்தி @29:29

    ReplyDelete
  3. பரச்சி, பனத்தி இருவரிடமும் நிறம் வேறாக இருந்தாலும் சுகம் ஒன்று

    ReplyDelete