Movie: Neengal KettavaiDirector: Balumahendra
Music: Illayaraja
ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்களில், மிக முக்கிய பங்கு வகிக்கும் பாடல் இது.
தமிழ் சினிமாவில் காலம் கடந்து நிற்கும் பாடல்களில் இந்தப் பாடலைப் போன்று மிகச்சில பாடல்களே கேட்ட உடனே சுருக்கென்று உள்ளத்தைத் தைக்கும் ஆற்றல் கொண்டது....
இதோ உங்களுக்காக அந்தப் பாடல் வரிகள்
.......................................................................
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றது என்பது மெய்தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

0 comments:
Post a Comment