பாடல்: 1
இயற்றியவர்: பட்டினத்தார்
திருமணம் என்கிற விஷயத்தின் அமைதியும் அர்த்தமும் தெரியாமல், திருமணம் தன் கர்வத்திற்கும் தன் உடம்பிற்கும் தீனி போடும் விஷயம் என்று நினைத்துக் கொண்டவர்களைப் பார்த்து இவ்வாறு கேலி செய்கிறார்.
நாப்பிளக்கப் பொய் உரைத்து நவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்று ஈசல் போலப்
புலபுலஎனக் கலகல எனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகை அறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்ட
ஆப்பு அதனை அசைத்து விட்ட குரங்கினைப் போல
அகப்பட்டீரே கிடந்தது உழல அகப்பட்டீரே !!!
- பட்டினத்தார்
பொருள்:
நாவே இரண்டாய்ப் பிளக்கும் அளவிற்குப் பொய்யைச் சொல்லி பணத்தைத் தேடித் தேடிச் சேமித்து மனைவியைக் கூடி, பூமியைப் பிளந்து வருகின்ற ஈசல் கூட்டம் போல பிள்ளைகளை பகட்டுக்காக பெற்று இறுதியில் காப்பாற்றவும் முடியாமல் கை விடவும் முடியாமல் பாசம் என்னும் வலையில் சிக்கி இறுதிவரை அகப்பட்டு உழன்று மடிவீரே
0 comments:
Post a Comment