Saturday, December 15, 2012

எரியெனக்கென்னும் ...


பாடல்: 2 

இயற்றியவர்: பட்டினத்தார் 




இந்த பாடலின்  மூலம் உடம்பின் நிலையாமையை சுருக்கென்று கேட்போர் நெஞ்சில் தைக்கும் படியாக எழுதியுள்ளார்  

"இந்த உடம்பு எந்த கணம் வேண்டுமானாலும் செத்துப்போய்விடும் என்று தெரிந்து கொண்டுவிட்டால் எவ்வளவு குறைவாக உடுத்த முடியுமோ அவ்வளவு குறைவாக உடுத்துவாய் . பசி போவதற்கு எவ்வளவு உண்ண வேண்டுமோ அது மட்டுமே உண்ணுவாய் வரும் நாட்களில் உயிர் வாழ்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அது  மட்டுமே செய்வாய் .

பிறரை இழிவுபடுத்தல், பிற உயிரைக் கொல்லுதல் பிற சொத்துகளை அபகரித்தல் என்கிற அபத்தமான விஷயங்கள் போய்விடும் .வாசனை பூசிக்கொண்டு உடைகளை மினுக்கிக் கொண்டும் , நகைகளில் தன்னை அலங்கரித்துத் கொண்டும், தன்னுடைய கெளரவத்தை தன் உடம்பால் வெளிபடுத்திக் கொள்கிற முட்டாள் தனம் நின்று போகும் .

இருக்கிற வரையில் இறைவன் பெயரை சொல்லிவிட்டு மற்றவர்களுக்கு உதவியாக வாழ்ந்துவிட்டு இறந்து போ . அமைதியாக இருப்பதற்கு பழக்கப்படுத்திக்கொள்"  என்று சொல்லாமல் சொல்கிறார் பட்டினத்தார்.


எரியெனக்கென்னும் புழுவோவெனக்கென்னு மிந்தமண்ணுஞ்
சரியெனக்கென்னும் பருந்தோவெனக்கெனுந் தான்புசிக்க
நரியெனக்கென்னும் புன்னாயெனக்கென்னு மிந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேனிதனாலென்னபேறெனக்கே.
Fire says the body is mine, but the worm too says it’s mine.
And this deep earth says, well it’s mine.
But the vulture and eagles says,It’s mine.
The jackal which wants to taste with their tongue says It’s mine 
And the mean dog says: It’s for me!
This stinking body I cherished with love for my entire life, well its not mine... ???
Oh! lord and what was the use ... 


0 comments:

Post a Comment