Showing posts with label என் எழுத்து. Show all posts
Showing posts with label என் எழுத்து. Show all posts

Wednesday, June 3, 2015

இது ஜெயமோகனின் 'அறம்'



'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களை கொன்று போடும் வல்லமை உடையது 'அறம்' என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பால்களில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவு படுத்தும் எவரையும் அறம் பாடி ஒழிக்கும் வல்லமையை தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அந்த வரிசையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன், தன் வலைதளத்தில் 2011 ஜனவரியில் ‘அறம்’ என்ற சிறுகதையில் தொடங்கி வரிசையாக ஒரு ஒன்றரை மாதத்துக்குள் 12 (‘மெல்லிய நூல்’ என்ற சிறுகதையையும் சேர்த்தால் 13) சிறுகதைகளை எழுதி வெளியிட்டார்.

Saturday, November 8, 2014

வாய்ப்பு



ஜகத்திரள்  என்னும் மந்தையில் ஜகம் என்னும் ஒரு சந்தையில் தனித்துலா வரும் விந்தை தான் யார் இவன்... ? புரையோடிப் போன சமூகத்தில் பொரைக்காக ஓடிக் கொண்டிருக்கும் சாமானியன் நான். இந்த மரணம் நோக்கிய பயணத்தில் வயது ஏற ஏற ஓடும் வேகமும் கூடுவதை உணரமுடிகிறது.

அவ்வப்போது இளை பாற நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகத்தில் உள்ள குறைகளை ஆராய்வதிலேயே பொழுது போகிறது. குறை கண்டுபிடிப்பது படித்தவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்... ஏனெனில் அப்போது தான் தனது பண்டிதத்தனத்தை மற்றவரிடம்  காட்ட முடியும். அப்படி பொருளாதார அரசியலைப் பற்றி சிந்திக்கும் போது கன நேரத்தில் உருவான ஒரு சிந்தனையையே இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

சமூகத்தில் நிலவுகின்ற பொருளாதார இடைவெளிக்கும், ஏற்றத்  தாழ்விற்கும்,ஒருவனிடம் வசதி இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் முக்கிய காரணம் சூழ்நிலைகளும், வாய்ப்புகளும்  அன்றி வேறேதுமில்லை.

ஒருவனுக்குக் கிடைக்கப்படும் வாய்ப்புகளே பல நேரங்களில் ஒருவனின் வெற்றியையும் வாழ்க்கையின் இருப்பு நிலையையும் தீர்மானிக்கிறது.




இது பலரால் பல நேரங்களில் உணரப்படாத காரணத்தினாலே இங்கே வேறு ஒரு ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒரு துறையில் முன்னேறப் போராடிக் கொண்டிருப்பவனுக்குக்  கிடைக்கும் வாய்ப்பு, சில நேரங்களில் வெற்றியைத்  தந்து அவனை ஒரு படி மேல உயர்த்திவைத்து அழகு பார்க்கிறது. 

இந்தப்  பிரச்சனையின் மையம் என்பது இங்கே தான் துவங்குகிறது, வெற்றி பெற்றவனை அடக்கம் தொற்றிக் கொள்வதற்குப் பதில் கர்வம் தொற்றிக் கொள்கிறது. அதுவரை கடந்து வந்த பாதையை மறந்து 'நான்' , இது என்னால் நிகழ்ந்தது என்பது போன்றத்  தாந்தோன்றித்  தனமான சிந்தனைகள் அவனுக்குள்ளே படரத்  துவங்குகிறது. அது அவனை வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருப்பவனையும் , வாய்ப்பு கிடைக்காதவனையும்  ஏளனமாகப் பார்க்க வைத்து விடுகிறது.

நான் உயர்ந்தவன், நீ தோற்றவன் அதனால்  என்னைவிடக்  கீழானவன் என்பது போன்ற கோணல் பார்வையுடன் அவன் உலகத்தை அணுகத்  தொடங்குகிறான்.





ஆழ்ந்து சிந்தித்தால் இதில் கர்வம் கொள்வதற்கோ  அலட்டிக் கொள்வதற்கோ ஒன்றும் இல்லை. நம்முடைய சூழ்நிலையும் சந்தர்ப்பமும் நம்மை ஒரு இடத்திலும், இன்னொருவனை வேறொரு இடத்திலும் அமர்த்துகிறது அவ்வளவே. இதில் ஒப்பீட்டுக்கு இடமில்லை.

எதார்த்தத்தில் வாய்ப்புக்  கிடைத்தவன் கிடைக் காதவனுக்கு கை கொடுத்து உதவ வேண்டும். ஆனால் இங்கே அப்படி ஒன்றும் நடப்பதாய் தெரியவில்லை, நடந்திருந்தால் இவ்வளவு வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் பொறாமைகளும் வந்திருக்காது என்பது என் வாதம்.

வாழ்க்கை என்பது ஆயிரம் கால் மண்டபம், ஒரே நாளில் யாரும் கட்டி  விட முடியாது என்ற பொன்மொழிக் கிணங்க நண்பர்கள், உறவுகள், பெற்றோர்கள், வழிகாட்டிகள், பின்புலம்,பணபலம் இவை போன்று நிறைய விஷயங்களை உள்ளடக்கியதே ஒருவனின் வாழ்க்கை நிலை.

இதை விடுத்து தலைமுறை தலைமுறையாய்  சேர்த்த சொத்தில் தன்  வாழ்க்கையைக்  கழிப்பவனை சமூகம் மதிப்பதும், எந்தப் பின்புலமும் இல்லாமல் தன் கையை ஊன்றி  சொந்தக் காலில் நிற்கப் போராடுபவனை இழிவாகப் பார்ப்பதும்  எந்த வகையில் நியாயம்...?

இதைத்தான்  கண்ணதாசன் மிக அழகாகக் கூறுவார் " அயோக்கியன் வெற்றி பெற்றால் அவன் செய்யும் முதல் வேலை யோக்கியனைக்  கேலி செய்வதே"   

இந்த நிலை மாறுமா...? மாறாதா...? என்பதை என்னால் கணிக்க இயலாது, ஆனால் மாற்றத்திற்கான ஒரே வழி நாம் அதை உணர்ந்து கொள்வதே என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் . 

இனி நம் வாழ்க்கைப்  பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் அது ஒரு ஆட்டோ ஓட்டுனரோ, வாயிற்காப்பாளரோ, தெருவில் காய்கறி விற்பவரையோ, உணவகத்தில் சாப்பாடு பறிமாருபவரோ, சக ஏழை நண்பனையோ, ஊழியரையோ... ! யாரையேனும், கர்வம் கொண்டு இழிவாகப் பார்க்கும் முன் ஒரு கனம் சிந்திப்போம்!!!

எனக்குக்  கிடைத்த வாய்ப்பு அவருக்கும் கிடைத்திருந்தால்...!!!




மாற்றம் தேவை 


Saturday, April 6, 2013

"டவுசர் கிழிஞ்சிரும் "


பாலாவின் பரதேசி திரைப்படம் உருவாக்கிய தாக்கத்தினால்  உதித்த சிந்தனை இது அந்த காலகட்டத்தில் மட்டும் தான் கொத்தடிமைகளும் கங்காணிகளும் வாழ்ந்து வந்தனரா....? இல்லை இன்றும் கொத்துக் கொத்தாய் அடிமைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்  கங்காணிகளும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ற வாரு தன்னை புதுப்பித்து கொண்டு அலைகிறான். எந்த காலத்திலும் அடிமை அடிமையாகவே உள்ளான்  ஆள்பவன் ஆண்டு கொண்டு தான் இருக்கிறான்.  







காட்சி 1:

கதாப்பாத்திரங்கள் : நக்கல் பாண்டி, அவனது நண்பன் ஆர்வம் ரமேஷ்.

இடம் : விடுதி அறை எண் 302


"உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னைக் கேட்டால் 
 என் கல்லூரி வாழ்க்கையைக் காட்டிடுவேன் 
 என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன் ....!!!
 ஓஹோ ...! ஓஹோ...! நா நா நா ...."

(டக் டக் டக் ....)

ரமேஷ் : டேய் குண்டா கதவத் தொரடா....! என்ன டா பண்ற உள்ள, தனியா...?

பாண்டி : சே... ஒரு பாட்ட நிம்மதியா கேக்க விடுறாங்களா...இவனுங்க
               இம்ச இருக்கே! அப்ப பப்பா .... இந்தா வரேன்.

ரமேஷ் : என்னடா கிளாஸ் இல்லையா இன்னிக்கு ஒனக்கு ?

பாண்டி : HOD மண்டையநோடது 2 HOUR. அவரு WIFE ஓட மார்க்கெட்டுக்குப் 
                போயிட்டாரு... அதான் ப்ரீ வுட்டாங்க. 
                நல்ல பாட்டு நம்ம COLLEGE லைப் ப பத்தி அருமையா பாடீருந்தாரு
                விஜய் ஆண்டனி. நீ ஆயிரம் சொல்லு நம்ம காலேஜ் லைப் மாதிரி
                ஜாலியா இருக்கிற நாளெல்லாம் திரும்ப வராதுல...?

ரமேஷ் : சும்மா தூக்கத்துல உளராம நான் சொல்றதக் கேளு. நாளைக்கு
                9 மணிக்கு எல்லாரும் ஆடிடோரியத்துல அசெம்பிள் ஆகணுமாம்.
               கம்பெனிலருந்து RECRUITMENT பத்தி சொல்ல வர்றாங்க. நம்ம
               ஒட்டுப்பெருக்கி அதாண்ட நம்ம PLACEMENT OPPICER வந்து
               சொல்லிட்டுப் போனான். 

பாண்டி : ஓஹோ ... எல்லா DEPARTMENTUMA ... ஆமா கம்பெனி பேரு...

ரமேஷ் : "டவுசர் கிழிஞ்சிரும் INTERNATIONAL LTD"

பாண்டி : என்னது...!? "டவுசர் கிளிஞ்சிருமா...!!! " என்னடா சொல்ற இதான்
                COMPANY பேரா ...?

ரமேஷ் : சந்தேகமா இருந்தா நாளைக்கு வந்து CONFIRM பண்ணிக்கோ...!


.......................................................................................................................................

காட்சி : 2

கதை மாந்தர்கள் : கங்காணி (RECRUITMENT OPPICER)
                     
                                  ஊர்சனம் (STUDENTS OPCOURSE RAMESH AND PAANDI ALSO)
  

இடம் : AUDITORIUM


கங்காணி : "HI, GOOD MORNING TO ALL! WOW ITS A BEAUTIFUL DAY, ITS GOOD
                     TO SEE LOT OF YOUNG TALENTS IN THIS FRESH MORNING. I HOPE 
                     ALL OF YOU HAVE HAD YOUR BREAKFAST....? HAVE YOU...! IF NO
                     MEANS I WILL WAIT U GO AND HAVE. YOUR HEALTH IS MORE
                     IMPORTANT SIR WE ALL EARNING FOR THIS STOMACH ONLY SIR... 
                     ISNT IT..?

STUDENTS : YES, SIR (IN CHORUS)

கங்காணி  : DO YOU NEED TIME TO HAVE YOUR BREAKFAST...?

ரமேஷ்      : அட அட அட  வேலைக்கே சேரல அதுக்குள்ள இவ்வளவு
                    அக்கறையா...! புள்ளரிக்குதுடா  பாண்டி.

பாண்டி     : வேலைக்கு வந்ததுக் கப்புறம் சோத்தையே மறந்திறனும்  கிறது
                   தாண்டா அதுல மறஞ்சிருக்கிற அர்த்தம். நீ வேணா பாரேன் இதே 
                   வாய் வேலைக்கு போனதுகப்புறம்  வேல தான் முக்கியம்
                   BREAKFASTAYUM சேத்து LUNCHULA நல்லாசாப்டுக்கெல்லாம்
                   தம்பின்னு சொல்லுவான் பாரேன். 

கங்காணி : IN THIS AGE YOU HAVE TO BE MORE ENERGETIC GUYS. LOOK I AM 
                   MORE ACTIVE THAN ALL OF YOU. BEFORE MARRIAGE ITSELF YOU
                   ARE LACKING ENERGY MEANS ... YOU ARE GOING TO GET EXHAUST
                   AFTER MARRIAGE SIR...

STUDENTS : LAUGHING (IN CHORUS) (அதுல ஒருத்தன்...) சாமி நல்லா சிரிப்பு
                    சிரிப்பா பேசுதுல்ல... ஹி ஹி .  

கங்காணி : OK LET ME COME TO THE POINT. BEFORE GOING TO SEE THE 
                   VISUALS OF OUR COMPANY I AM GOING TO CLARIFY THE DOUBT OF
                   YOURS ABOUT OUR COMPANY. U CAN ASK....?

STUDENTS : WHY IS IT SO TO NAME YOUR COMPANY AS
                   "டவுசர் கிழிஞ்சிரும் INTERNATIONAL LTD" IS THERE ANY REASON.

கங்காணி : EXCELLENT QUESTION ... WATS YOUR NAME GENTLEMAN...?

STUDENTS : PROUDLY (BECAUSE HE THINKS HE HAS ASKED A QUESTION AMONG
                   THE CROWD WHICH IS GOING TO CHANGE INDIAN CONSTITUTION... 
                    HI HI...) M.PAAVAADAI SIR.

பாண்டி    : வெளங்கிரும்...என்னடா பாவட , டவுசர்ன்னு ஒரே துணிக்கட 
                  சமாச்சாரமா இருக்கு.

கங்காணி : !!!. THE YOUNG GENTLEMAN MR. M.PAAVAADAI HAS ASKED A
                   BRILLIANT QUESTION. YA THIS IS WAT WE NEED DONT FEEL SHY TO
                   ASK QUESTIONS GUYS. LET ME  ANSWER, YOU ARE WEARING ONLY
                   டவுசர் NO OTHER CLOTHES. WHAT IF THE "டவுசர் 
                   கிழிஞ்சுபோச்சுன்னா". HMM COME ON HMM COME ON GUYS ANSWER.

பாண்டி   : டேய் மாப்ள எவனோ மாக்கானப்  புடிச்சு கூட்டியாந்துட்டாங்கடா.
                ஆரம்பத்துல இருந்தே WRONGAA போய்க்கிட்டிருக்கு.

(a guy from audience sir shame shame puppy shame sir)

கங்காணி : NO NO... TECHNICALLY SPEAKING YOU ARE IN A STAGE OF NIRVAANA
                   COMPLETE ENLIGHTMENT... FREE FROM ALL SORROWS THE ETERNAL
                   STAGE OF BLISS. FULL JOY. LIKE BUDDHA AND MAHAVEERA. THATS
                   OUR MISSION THE COMPLETE ENLIGHTMENT FOR JOY WHEN YOU
                   WORK. IF YOU WORK IN OUR COMPANY U WILL EXPERIENCE THE
                   "டவுசர் கிழிஞ்சிரும்" EFFECT.

RAMESH  : என்னடா ஒன்னும் புரியல...!

பாண்டி  :  ஆங் அவன் கம்பெனில வேல செஞ்சேனா  பைத்தியம் பிடிக்கிற
                  வர உன்ன விட மாட்டாங்க நீ போட்ருக்க துணிய நீயே கிழிச்சிக்கிற
                  நிலைமைக்கு உன்ன விட்ருவாங்க அதான் தெளிவா சொல்றனே U
                  WILL EXPERIENCE "டவுசர் கிழிஞ்சிரும்" EFFECT NU. 

ரமேஷ் : சும்மா இருடா செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் டா.

கங்காணி : OK LET US ALL WATCH A VISUAL ABOUT OUR COMPANY.

(VISUAL IS PLAYING  அங்க இருக்கிற கொசுவெல்லாம் ஒவ்வொருத்தன் வாய்குள்ளயும் பொய் ரவுண்டு அடிசிகிட்டு இருக்கு... ஓய்ங்ங் ங் ங் ....)

ரமேஷ் :  டேய் இது கம்பெனியா  இல்ல சொர்கமாடா உள்ளயே SWIMMING
                POOL, GYM, SPORTS CLUB, THEATER  PLAYGROUND, RESTAURANT ... 
                ஐயோ டேய் ரூம்ஸ் எ பாருடா BED, FAN நீட் ஆ வேற இருக்குடா.
                கிளாஸ் ரூம்லாம் சான்ஸே இல்ல போ...! WORLD CLASS FACILITY NU
               அவன் பொய் சொல்லல , இல்ல மச்சி, வாழ்ந்த இந்த மாதிரி ஒரு
               எடத்துல வாழனும் டா. 

பாண்டி  :  எல்லாம் சரி இவ்ளோ வசதி இருந்தா சந்தோசமாத் தான
                 இருக்கணும் பின்ன ஏன் பேய் அறஞ்ச மாதிரி ஒரு பீதியாவே 
                 எல்லாரும் அலையிறாங்க அந்த வீடியோ ல ....?


கங்காணி :  WE ARE HAVING MANY SERIOUS CASES... OOPS SORRY!! MANY
                    SENIOR STUDENTS FROM YOUR COLLEGE EVERYONE IS IN TOP LEVEL
                    MANAGEMENT. YESTERDAY OUR GM ALSO SPOKE WITH ME THIS
                   YEAR HE WANTS 100 MORE STUDENTS FROM ABC COLLEGE.

(a guy from audience sir this is BAC COLLEGE NOT ABC COLLEGE)

கங்காணி  : OH! MY GOD! எல்லா COLLEGE லயும்  இதே பொய்யச் சொல்லி
                    இப்படி மாட்டிகிட்டேனே. சுதாரிச்சிக்கோ கைப்புள்ள. YES I KNOW
                    YOUNG MAN WE NEED 100 MORE FROM ABC COLLEGE 200 MORE
                    FROM BCA COLLEGE THATS WHAT I WAS TRYING TO CONVEY.

பாண்டி    :  அடிச்சான் பாரு அந்தர் பல்டி... மாப்ள இவன் பயங்கர மான ஆளா 
                    இருக்கான்யா... 

கங்காணி : OK GUYS OUR COMPANY HAS EXCELLENT GROWTH 
                   OPPOURTUNITIES AND ONSITE OPPOURTUNITIES IF YOU PERFORM
                   WELL U CAN GO TO USA, UK, AUSTRALIA AND MIAMI ( ESPECIALLY
                   FOR BOYS)

(CROWD LAUGHS IN CHORUS)

கங்காணி : OK HOW MANY OF U WANT TO JOIN OUR COMPANY

(ALMOST EVERYONE RAISED THEIR HANDS)

கங்காணி : WOW ITS HUGE ITS GOOD TO SEE EVERYONE IS INTERESTED.
                   இந்த விஷயத்த உடனே லண்டன்ல இருக்கிற தொர மாருக்கு
                   சொல்லணும். 

( கங்காணி mind voice is singing ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடிக்கறக்கணும்... )

பாண்டி  : டேய் நீ ஏண்டா கை தூக்குன ?

ரமேஷ்  : பின்ன அவன பாத்திய iphone,  coat suit,  tie,  carnu, oru range ah இருக்கான்
               நாமளும் அது மாதிரி ஆகா வேண்டாமா அதான்.ஆமா நீ என்னடா 
               கை தூக்கல ?

பாண்டி  : கேக்குறவன் கேன ன்னா  கேப்பையிலையும் நெய் வடியுமாம் ?
                 பணம் கொடுகிறான் கிரதுக்காக எது பின்னாடியும் போயிற 
                 முடியாதுடா  தம்பி. 

.......................................................................................................................................


சில வருடங்களுக்கு பிறகு 


பாண்டி   : டேய் எப்படி இருக்க டா பாத்து ரொம்ப நாள் ஆச்சு....

ரமேஷ்   : நானா இந்த வரி போதும் ஏன் நிலமைய சொல்ல

" சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் 
 நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்...

 சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்  
 நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்..."


பாண்டி   : உனக்கு எப்பவுமே விளையாட்டு தான் போ 
                  சேரி இவன் நம்ம காலேஜ் ஜூனியர். ஒன்னோட கம்பெனில தான்
                   PLACE ஆயிருக்கான்  அதான் உன்கிட்ட கூட்டிவந்தேன் . பேரு 
                  கழுதப்புலி  நல்ல பையன்  எதாவது ஹெல்ப் பண்ணு . 
                  என்னடா ஒன்னும் பேச மாட்டிக்கிற.


ரமேஷ்   : நரக குழில வந்து மாட்டிகிட்டியே ........


DEDICATED TO ALL RAMESH








Sunday, March 17, 2013

எந்திரம் மனுஷரூபேணா ....


                                                                                                                                                           படைப்பு : 1

 



எந்திரம் மனுஷரூபேணா .... 



....................................................................................................................

"என்ன செல்வம், மொத நா வேலைக்கா சொக்கா எல்லாம் சோக்காகீது... ம்ம்  நடக்கட்டும் நடக்கட்டும்... நல்லா இருந்தாச் சரி" என்று போகிற போக்கில் பாராட்டுவது போல் தன் இயலாமையால் வரும் மனக்குமுறலை வார்த்தைகளில் வெளிக்காட்டிவிட்டுப் போனார் அண்டை வீட்டு அரங்கநாதன்.

அவன் வேலைக்குச் செல்லும் சில மாதங்களுக்கு முன்பிருந்தே இது போன்ற போலிப் பாராட்டுக்களை தன் சொந்தங்களிடமும் அண்டை வீட்டார்களிடமிருந்தும் வாங்கிக் கொண்டு தான் இருந்தான். 

அவனுக்கு நடிகர் திரு. கமலஹாசன் கூறிய வசனங்களில் மிகவும் பிடித்த ஒன்றும் அடிக்கடி அவன் முணுமுணுப் பதுமான வசனம் "மறதி  ஒரு தேசிய வியாதி". ஆனால் இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அவரை என்றாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் "ஐயா! மறதி அல்ல ஒரு தேசிய வியாதி. இன்றைய சூழலில் பொறாமை தான் மிகப்பெரிய தேசிய வியாதி" என்று சொல்லும் அளவிற்கு போலிப் பாராட்டுகளால் திணறிப் போய் இருந்தான்.



அது ஒரு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், பல அடுக்கு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடத்தைப் பார்த்தவாறே சற்று தயங்கிய படியே உள்ளே நுழைகிறான்.

அலுவலக மெய்க்காப்பாளர் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் நாளிதழ் செய்திகளை படித்துக் கொண்டிருந்தார்.

 அவனாக எதாவது கேட்டால் பார்ப்போம்... என்கிற மனப்போக்கு இயல்பாகவே அவரிடம் தெரிந்தது.

அவன் முதல் நாள் மிரட்சியின் காரணமாக, சற்று தாழ்ந்த குரலில் சார்... சார்... என்று அவரை அழைக்க முயற்சித்தான். அவர் அப்போதுதான் அவனைக் கவனிப்பது போல்,
"யார் நீங்க, என்ன வேணும், யாரப்பார்க்கணும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவன் முன்பு வைத்தார்.

"நான் இங்க புதுசா வேலைக்கு சேந்திருக்கேன் HR அவுங்களப் பாக்கணும்"




"ஓ! புதுசா...! இப்டியே நேராப்போனா லிப்ட் லாபி வரும் மூணாவது மாடியில அஞ்சாவது கேபின்ல இருப்பாங்க அவுங்கதான் HR." என்று கூறி மீண்டும் நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தார். அவன் நன்றி என்று கூறி நடக்க ஆரம்பித்தான் ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவேயில்லை.

அவன் செல்கையில் அவர் சொன்ன ஒ!புதுசா... ! என்ற வார்த்தை மட்டும் அவனை என்னமோ செய்தது. ஏன்? புதுசென்றால் என்ன? அந்தக் கேள்விக்குப் பதிலை யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு பேர் லிப்டுக்குள் நுழைந்தார்கள். 

அவன் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். அவர்கள் அதைக் கண்டு கொள்ளாதவாறு ஏதோ முக்கியமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடு பட்டிருந்தனர். laptop, ipod, sema super model, nachu configuration, samsung, sony... இது போன்ற வார்த்தைகள் மட்டுமே அவன் காதுகளில் அதிகம் ஒலித்துக் கொண்டிருந்தது.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான். அலுவலகம் பரபரப்பாக இல்லாமல் மயானம் போன்று சலனமற்று இருந்தது.

வேலைக்கான அனைத்து தகவல்  பரிமாற்றங்களையும் முடித்து விட்டு தனக்கு கொடுக்கப்பட்ட இருக்கையில் கணினி முன்பு வந்து அமர்ந்தான்.

தனக்கு அருகில் இருப்பவர் தன்னிடம் ஏதேனும் அறிமுக வார்த்தைகள் பேசுவார் என்று எதிர் பார்த்து ஏமாந்து போனான்.

அவர் அந்தத் திரையில் நமிதாவின் நடனக் காட்சி எதோ ஒன்று ஓடிக்  கொண்டிருப்பதைப் போன்று கண் இமைக்காமல் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இவனும் அப்படி என்னதான் தெரிகிறது என்னும் ஆவலில் உற்றுப் பார்த்தான் இரண்டு நிமிடங்களுக்கு  மேல் அவனால் தொடர்ந்து அதைப்  பார்க்க முடியவில்லை.



அன்றைய பொழுது முழுவதும் யாரும் வந்து அவனிடம் எதுவும் பேசவில்லை. மாறாக அவனை கண்காட்சிப் பொருளாக வேடிக்கைப் பார்த்துப் போனார்கள். அப்படி அவனை  பார்க்கும் பொழுதெல்லாம் அவன் உடல் கூசிப் போனான். 

மாலை அலுவலகம் முடியும் நேரம் வந்தது, அன்று அவன் பேசிய வார்த்தைகள் மிகக்  குறைவு. மற்றவர்களும் அவ்வளவு தான் பேசி இருந்தார்கள்.  ஆனால் தன்னிடம் யாரும் பேசவில்லையே என்ற ஏமாற்றத்துடன்  லிப்டுக்குள் நுழைந்தான்.   

மீண்டும் லிப்டுக்குள் அதே இரண்டு பேர்... கடவுளே இம்முறை samsung, sony இது பற்றி மட்டும் வேண்டாமே  என்பது போல் வேண்டிக் கொண்டான். அவர்கள் பேச்சைத் தொடங்கினார்கள். 


"சார்! ஒரு குட் நியூஸ் நம்ம ஆபீஸ்ஸுக்கு ஒரு நியூ arrival ஒன்னு வந்திருக்கு சார்..."

செல்வத்திற்கு மனதில் சந்தோசம் தாங்க வில்லை. அட ! இவர்கள் பேசுகிறார்கள். அதுவும் புதிதாய் வந்த என்னைப் பற்றி . சரி மேல கேட்போம் என்பது போல்  அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னது சார் ! எனக்கு தெரியலையே சார் !... நீங்களே சொல்லுங்க."

"சார் புதுசா HIGH RESOLUTION HP SCANNER ஒன்னு வந்திருக்கு சார்... வித் HIGHER END CONFIGURATIONல இனிமே ஜாலி தான் போங்க."

"வாவ்! சூப்பர் சார் ரியலி இட்ஸ் அ  குட் நியூஸ் சார் இனி நமக்கு பிரச்னை இல்லை" என்றார் இரண்டாம் நபர்.

தரைத் தளம் வந்தது. லிப்ட் மட்டும் தரையைத் தொடவில்லை அவன் மனதில் தோன்றிய ஏக்கத்துடன்  கூடியதொரு  சின்ன ஆசையும் தரை தட்டியது.

அவன் கண்களில் நீர் தழும்ப சாலையில் வந்து நின்றான். அவ்வளவு மக்கள் கூட்டத்திலும்  தான் தனித்திருப்பதை போல் உணர்ந்தான்.

அப்பொழுது அவனை ஒரு ஆட்டோ கடந்து செல்வதை கவனித்தான். அதில் கீதையின் வாசகம் ஒன்று எழுதப் பட்டிருந்தது "தெய்வம் மனுஷரூபேணா"

அவன் மெல்லிய புன்னகையுடன், இல்லை, நிச்சியமாக இல்லை. இன்றைய உலகில் எந்திரங்கள் தான் மனுஷ ரூபத்தில் இருக்கின்றன. எந்திரங்களுடன் பழகிப் பழகி இவர்களும் எந்திரமாகிப் போய்விட்டார்கள்.

எந்திரங்களைப் புரிந்து கொண்ட அளவிற்கு மனித மனங்களை புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கின்றனர்.

அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு தானும் காலப் போக்கில் இப்படி எந்திரத்தனமாக மாறிபோவேனோ ? என்ற கேள்வியுடன் சாலையில் நடந்து சென்றான்.

எந்திரம் மனுஷரூபேணா ....     





**********************************************************

Saturday, January 5, 2013

பொறாமை





நமக்கு என்ன தேவை என்று நாம் நம்மைக் கவனிக்காமல் எதை எதையோ தேடிப்போக என்ன காரணம்?

பொறாமை காரணம். அடுத்தவரோடு நம்மை ஒப்பிடல் காரணம். எப்போதுமே அடுத்தவருடைய மறைவான ரகசியங்களை மறைந்து பார்த்துக் கொண்டிருப்பது காரணம். 

அடுத்தவருடைய முகத்தைப் பார்த்து, அவர் சிரித்தால் தான் சிரித்து, அவர் கோபப்பட்டால் தான் கோபப்பட்டு, அவர் வீடு வாங்கினால் தானும் வாங்க வேண்டும் என்று முற்படுவது என, தன் வாழ்க்கை முழுவதும் அடுத்தவருடைய கைகளில் கொடுத்து விட்டு இருப்பது காரணம். 

உங்களை நீங்கள் அதிகம் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறபோது அல்லது உங்களை எல்லோரையும்விட மிகத் தாழ்மையானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறபோது தான் ஒப்பிடுதல் குணம் வருகிறது.

இந்த ஒப்பிடுதல் ஒரு பொறாமையை வளர்கிறது. இந்த பொறாமை வெகு எளிதில்  முகத்தின் லட்சணத்தையே மோசமாக்குகிறது. ஒரு கீழ் வெட்டுப் பார்வையையும் ஒரு கோணல் புத்தியையும் எளிதே கொடுத்து விடுகிறது.

மற்றவரைப் பற்றி தவறாக எடை போடுவது மட்டுமல்லாமல் உங்களை நீங்களே அறிவதற்கு மிகப்பெரிய இடைஞ்சலை இது ஏற்படுத்துகிறது.  

உங்களுடைய இயலாமையை  ஏற்றுக்கொள்ள முடியாமல், அடுத்தவரின் வெற்றிக்குப்  பின்னால் இருக்கும் முயற்சியை எளிதாக மறைத்து அதிர்ஷ்டம் என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டு உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ளும் குறுகிய மனபான்மையை  வளர்த்துவிடுகிறது. 

ஒப்பிடுதல் செய்யச் செய்ய உங்களுக்குத்தான் வேதனை. ஒருவரின் வெற்றியின் ரகசியம் எது என்று தெரியாமலேயே, அவர்  உயர்வதைப் பற்றி மட்டுமே மனதுக்குள் பொருமி வேதனைப்படுவது எந்த விதத்திலும் லாபம் தராது.

அவன் MBA படிச்சிட்டு 40,000 சம்பளம் வாங்குறான்.  நல்லா வாழ்க்கைய அனுபவிக்கிறான் பா. நாமளும் தான் இருக்கோமே ஒன்னத்துக்கும்  லாயக்கில்லே.

சில நாட்களில், மச்சான் நானும் MBA படிக்கப் போறேன்டா, ஆமாண்டா நல்ல JOB OPPOURTUNITIES நல்ல சம்பளம்  வாழ்க்கையில செட்டில் ஆகிடலாம் மச்சி. இப்படிதான் எங்க மாமா  பையன் ஒருத்தன் MBA முடிச்சிட்டு இப்போ ஜெர்மனில இருக்காண்டா என  வரிசையாக வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் MBA படித்து முடித்தவர்கள் என்பது போல சர மாதிரியான உதாரணங்கள் வந்து குவியும். 

எல்லாரும் படிக்கிறாங்கடா   நீயும் படி என  அறிவுரைகள் வழங்கப்படும் . இங்கு தான் குழு மனப்பான்மை என்ற ஒன்று தொடங்கி தனித் திறமை நசுக்கப்படுகிறது. 

சச்சினைப் போன்று எ.ஆர். ரஹ்மானும்,  கிரிக்கெட் விளையாட்டில் எளிதில் வெற்றியும் நல்ல வருமானமும் கிடைக்கிறது  நாமளும் கிரிக்கெட் கற்றுக் கொள்வோம் என்று கிளம்பி இருந்தால். இன்று ஆஸ்காரின் மூலம்  தமிழகத்தை உலக அரங்கில் அவர் கௌரவபடுத்தியிருக்க முடியாது.

நமக்கு என்ன தெரியும் என்பதை மறந்து, என் சித்தப்பா பையனை போன்று, என் நண்பனைப் போன்று , பக்கத்து வீட்டு அண்ணனைப் போன்று நானும் அவ்வழியே சென்று வாழ்வின் வெற்றியை ருசிக்க வேண்டும் என்று நினைத்தால், நம்முடைய  அடையாளத்தை இழந்து தோல்வியை சந்திக்கும் போது பொறாமை ஒரு நோயாக மாறியிருக்கும்.

பலம் குறைந்தவர்கள் தான் ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள். ஒப்பீடு செய்யச் செய்ய இன்னும் பலம்  குறைந்து கொண்டே போகிறது.  ஒப்பிட்டு பார்ப்பது திகைப்பை ஏற்படுத்த, அந்த திகைப்பு சில சமயம் 'நான் ஜெயித்தால், எனக்கு வாய்ப்புக் கிடைத்தால், நான் மட்டும் அந்த விதமாக முன்னேறிவிட்டால்' என்று கனவுக்கு வலி வகுத்து விடும். கனவு இப்போது கையிலிருக்கும் வேலையையும் நழுவவிட வைத்து விடும்.

அடுத்தவரின் வெற்றி பொறாமையையும், அடுத்தவரின் தோல்வி  மகிழ்ச்சியையும் தருமேயானால், உங்களுக்கு உங்கள் வாழ்க்கை  பற்றிய தெளிவு இல்லை என்பதே பொருள்.



"சிலர் அல்லும் பகலும் சிறு கல்லாய்  இருந்து கொண்டு 
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்,                                    
விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார். 
குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்."
                           
                                                                         -பட்டுகோட்டை கல்யாணசுந்தரனார் 
                                                                 
     

........................................................................

 இந்த வீடியோப்  பதிவை தவறாமல் பாருங்கள்  நிச்சயம் இந்தக்  காட்சி உங்களுக்கு நல்லதொரு தீர்வையும் தெளிவையும் தரும். 



........................................................................