Wednesday, December 12, 2012

கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா


Movie: Angadi theru
Director: Vasantha Balan
Composer: G.V.Prakash kumar


"நாம் வாழும் மண்ணுக்குக் கீழே நரகம் உள்ளது என்பது புராண நம்பிக்கை. அது    புராணத்தில் மட்டும் தானா ? நிஜ வாழ்க்கையில் இல்லையா என்ன ? நாம் வாழும் இந்த  சமூகத்துக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனையோ சமூகங்கள் நம் கவனத்திற்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள், சிரிக்கிறார்கள் , நேசிக்கிறார்கள்..."
                                                                                     - எழுத்தாளர். ஜெயமோகன் 


அப்படிப்பட்ட நுண்ணிய உலகத்தின் சித்தரிப்பே  இந்தப் பாடல். இந்தப் பாடலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின்  வலியை திரு. வசந்தபாலன் அப்படியே பதிவு செய்திருப்பார்.

வாழ்க்கையின்  மீது வெறுப்பு வரும் போதெல்லாம் இந்தப் பாடலைப் பாருங்கள். இந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த, அவர்கள் படும்  கஷ்டத்திற்கு முன்பு உங்கள் கஷ்டம் எல்லாம் கடுகளவு கூட இருக்காது. 

ஒரு கணம் சிந்திப்போம்  இவர்களது வாழ்க்கை நமக்கு கிடைக்குமேயானால்  ?

நம் லட்சிய  வாழ்க்கையாக எதை வைத்திருப்போம் ? 

சந்தேகமே வேண்டாம்  தற்பொழுது நாம் வாழும் வாழ்க்கை தான் நமக்கு  கனவாகவும்  வரமாகவும் தோன்றும்.

எதார்த்தத்தில் நமக்கு  இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் மிகச் சிறியவை அது  நம் மனத்தின் கண் தான் பெரிதளவில் தெரிகிறது....... 

வாழ்க்கையைப் பற்றிய சலிப்பை உதறித்  தள்ளி விட்டு வாழத் தொடங்குவோம்.

.................................................................................................................................................

இதோ அந்தப்  பாடல் வரிகள் ...



  

கண்ணில்  தெரியும் வானம் கையில் வராதா 

புல்லும் பூண்டும் வாழும் உலகம் 
இங்கு நீயும் "வாழ வழி இல்லையா?"

பூமியில் ஏழைகளின் ஜனனம்


அது கடவுள் செய்த பிழை இல்லையா!

இது மிகக் கொடுமை...

இளமையில் வறுமை...

பசி தான் மிகப் பெரும் மிருகம்

அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா

கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா... ?

இது மாறுமா ?

"எதையும் விற்கும் எந்திர உலகம்

எல்லாம் இங்கே உண்டு
மனிதம் மட்டும் தேடிப் பார்த்தும் எங்கும் இல்லை!"





கண்ணும் காதும் கையும் காலும் 
இல்லா மனிதர் உண்டு
வாயும் வயிறும் இல்லா மனிதர் எங்கும் இல்லை

மனிதன் எங்கும் கண்ணின் விதை
அள்ளித் தூவ கண் வேண்டும்

வருங்காலத்தில் வறுமை இல்லா உலகம் வேண்டும்

புல்லும் பூண்டும் வாழும் உலகம் 
இங்கு நீயும் வாழ வழி இல்லையா?


பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா!

இது மிகக் கொடுமை...

இளமையில் வறுமை...

பசி தான் மிகப் பெரும் மிருகம்

அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா

கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா... ?

இது மாறுமா ?



----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தப் பாடல் வரிகளின் தாக்கம் உங்களுக்கு முழுதாய் கிடைக்க வேண்டும் எனில்...
வசந்த பாலன் இதை படமாக்கி இருக்கும்  விதத்தை நீங்கள் கண்டிப்பாகப்  பார்க்க வேண்டும் 

இதோ அந்தப் பாடல் காட்சி.....





**************************************************************************************************************

தகவல் : வாய்ப்பு  கிடைத்தால் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதிய எழாம் உலகம் என்னும் நாவலைப் படியுங்கள் . நான் கடவுள், அங்காடித் தெரு என்ற இரண்டு உன்னத  திரைப்படம் உருவாகக்  காரணமாய் அமைந்த கதை . நிச்சயமாக அதைப் படித்த பின்னர் உங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை குறை கூறுவதை நிறுத்திவிட்டு அதை   நேசிக்கத்  தொடங்குவீர்கள் .


**************************************************************************************************************


0 comments:

Post a Comment