Wednesday, December 5, 2012

பூக்கள் ரசித்தது எப்போது?







Movie: Vaazthukal
Music: Yuvanshankar raja
Director: Seeman









இந்தப்  பாடலை அநேகமாக பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....

திரு. சீமான் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த வாழ்த்துகள் என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல். இயக்குனர் சீமான் அவர்கள் சமூக சிந்தனை கொண்ட ஒரு சிறந்த படைப்பாளி.

இன்றைய காலச் சுழலில் இப்படி ஒரு பாடலை பதிவு செய்து, மக்களுக்கு அவர்கள் மறந்து போனதை எடுத்துச் சொல்லியே ஆகா வேண்டும் என்ற நோக்கத்தில் படமாக்கி இருப்பார்... இந்த பாடலைத்  தந்ததற்கு அவருக்கு நமது நன்றிகலந்த பாராட்டுக்கள். 

கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு வாழ்க்கையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் எது வாழக்கை என்றும்  புரியாமல் எப்பொழுதும் இலக்கு நோக்கியே பயணப்பட்டிருக்கும் CORPORATE ganaவான்களே இதோ உங்களுகாக... 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------





பூக்கள் ரசித்தது எப்போது? அது எப்போது? 
புல்வெளியில் நடந்தது எப்போது?

அது எப்போது? நதியில் நனைந்தது எப்போது? 
நிலவை ரசித்தது எப்போது? 

இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது? 

இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது....?

வானத்தைப் பார்த்துக் கிடப்பது எப்போது? 
கர்வம் கலைந்து தொலைவோம் அப்போது

வண்ணத்துப் பூச்சிகள் பிடிப்பது எப்போது?
வயதை மறந்து சிரிப்போம் அப்போது 

நீ மேகத்தில் ஓவியம் பார்த்தது எப்போது?
நம் சோகம் கலைந்ததை நினைப்போம் அப்போது

பூக்கள் ரசித்தது எப்போது? அது எப்போது? 
புல்வெளியில் நடந்தது எப்போது?

வானவில் பார்த்து நின்றது எப்போது?
நிற வெறி தொலைந்த உலகம் பார் அப்போது 

ஆற்றில் மீன்கள் ரசித்தது எப்போது? 
நதி நீர் சண்டை வலித்திடும் அப்போது 

ஒரு பாயென வரப்பில் படுத்தது எப்போது?
உன் தாயென பூமியை உணர்ந்திடு அப்போது

பூக்கள் ரசித்தது எப்போது? அது எப்போது? 
புல்வெளியில் நடந்தது எப்போது?

அது எப்போது? நதியில் நனைந்தது எப்போது? 
நிலவை ரசித்தது எப்போது? 

இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது? 

இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது....?எப்போது....?







Your deepest roots are in nature.  No matter who you are, where you live, or what kind of life you lead, you remain irrevocably linked with the natures creation - Charles Cook


1 comments:

  1. Intha paadalai rasithirukkiren...Intha padathil ennaku migavum pidhitha padal "Enthan Vaanamum Neethaan."....

    ReplyDelete