Saturday, December 15, 2012

அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு

பாடல் : 4


இயற்றியவர் : சிவவாக்கியர்  



சித்தர் பாடல்கள் அனைத்தும் சில வரிகளிலேயே வாழ்வின் உண்மையான நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டும் வல்லமை  பெற்றவை . அதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த உதாரணம் 


                 "மண்களம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
                   வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேணுவார் 
                   நம் களம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் 
                   எண்கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே"

பொருள்:

மண்ணைக்கொண்டு கட்டப்பட்ட வீடு இடிந்து போகும் நிலையில் இருக்கும் போது செங்கலை வைத்து அடுக்கி 
அடுக்கி புதுப்பிக்க உடனடி முயற்சிகள்  மேற்கொள்வார். 

வேறு தங்கமோ வைரமோ அல்லது விலை உயர்ந்த பொருள்களோ சிதைந்து விட்டாலும் என்றுமே மதிப்பு உண்டு என்று வேண்டி வேண்டி பாதுகாப்பார்.

உன் உயிர் உன் உடலை விட்டு  போன அடுத்த கணமே  நாறும் பிணம் என்று விரைந்து அதை அழிப்பதற்கு உடனடி முயற்சிகள் மேற்கொள்வார். என்னக்குள் இருந்து பல மாயங்களை செய்யும் ஈசனே இது என்ன மாயம் ஐயா !!! 

உன் உடலில் உயிர் உள்ளவரை தான் உனக்கு மதிப்பு. உன் உறவுகள் கூட நீ இறந்த பின்பு உன் நாறும் உடலை தொடத் தயங்கும்.... 

இதை உணர்ந்து, தான் என்கிற அகந்தையில் ஆட்டம் போடாமல், வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு அமைதியாக இருக்கப்  பழகிக்கொள்.


"அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு" - கவிஞர் வாலி 




0 comments:

Post a Comment