Saturday, December 29, 2012

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு...




Movie:unaal mudiyum thambi
Poet:pulamaipithan
Music:Illayaraja
Director:K.Balachandar

....................................................................

இந்த பாடல் வெளியாகிய ஆண்டு August 1988 அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட வரிகள் இந்த 2013 ஆண்டுக்கும் பொருந்தும் நிலையில் தான் இந்தியாவின் வளர்ச்சி உள்ளது.

Karl marx's economic inequality theory இன் படி "The rich get richer and the poor get poorer" என்ற கொள்கைக்கு இணங்க ஏழை இன்னும் ஏழையாகவே நசுக்கப் பட்டிக்கொண்டிருக்கும் நிலை தான் நம் நாட்டில் இன்றும் நீடிக்கிறது. 


அதை அப்படியே விவரிக்கும் கவிஞர் புலமைபித்தனின் வரிகள் இதோ. 

....................................................................




புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு 
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல

வீதிக்கொரு கட்சியுண்டு சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல

இது நாடா இல்ல வெறும் காடா
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா

(புஞ்சை உண்டு)

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்துக் கொடுத்தது

ஊருக்குப் பாடுபட்டு இழைத்த கூட்டமோ 
வீடின்றி வாசலின்றித் தவிக்குது

எத்தனை காலம் இப்படிப் போகும்? 

என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்

ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

(புஞ்சை உண்டு)

ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது

தானாகப் பாதை கண்டு நடக்குது

காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது 

எண்ணிய யாவும் கைகளில் சேரும் நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி  வேண்டும் கண்ணுக்குள்ளே

சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா 
கங்கையும் தெற்கே பாயாதா காவிரி யோடு சேராத
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு 
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல!!!

இது நாடா இல்ல வெறும் காடா
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா





....................................................................

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து சில விவரங்கள். 
http://en.wikipedia.org/wiki/Poverty_in_India
http://en.wikipedia.org/wiki/Corruption_in_India
  • உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர்.  
  • ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டப்படியான, மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவின் 75.6% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு தலா $2 குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்
  • 1990களின் நடுப்பகுதிகளிலிருந்து 30 மில்லியன் இந்திய மக்கள் பசியின் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் மேலும் 46% குழந்தைகள் எடை குறைவாக இருந்தனர்.
  • நியூயார்க் டைம்ஸ் சிற்கு இணங்க, சுமார் 42.5% சிறார்கள் இந்தியாவில் ஊட்டச் சத்துக் குறைப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலக வங்கி, உலக சுகாதார நிறுவனத்தால் செய்யப்பட்ட மதிப்பீடுகளை சுட்டி, கூறுகிறது " சுமார் 49 விழுக்காட்டு உலகின் குறை எடை சிறார், 34 விழுக்காட்டு வளர்ச்சி குன்றிய சிறார், மற்றும் உலகின் 46 விழுக்காட்டு எடை இழந்த சிறார், இந்தியாவில் வாழ்கின்றனர்."
  • 2010 இல் தி இந்து நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரையின் படி, சுவிஸ் வங்கிகளில் 1456 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக கறுப்புப் பணத்தை இந்தியர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. "மற்ற உலக நாடுகளின் கருப்புப் பணம் அனைத்தையும் சேர்த்தால் கூட இந்தியாவிலிருந்து இருக்கும் கருப்புப்பணம் அதிகமானது" என்று சுவிஸ் வங்கிகள் சங்கம் அதன் 2006 ஆம் ஆண்டின் அறிக்கையில் கூறியதாக என்று சில செய்தி அறிக்கைகள் கூறின. சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்திய கறுப்புப் பணத்தின் அளவு நாட்டின் தேசிய கடனை விட 13 மடங்கு அதிகமாக இருக்கிறது.









0 comments:

Post a Comment