Saturday, May 4, 2013

OVER CONFIDENCE... உடம்புக்கு ஆகாது...



கவிஞர் கண்ணதாசனின் "எண்ணங்கள் ஆயிரம்" என்ற புத்தகத்தில் இருந்து நம்பிக்கை என்ற தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள  சில கருத்துக்கள்.

இன்றைய MODERN இளைஞர்களுக்கு தேவைப்படுகிற மிக முக்கியமான கருத்துக்களை வலியுறித்து உள்ளதால் இந்தப் பகிர்வு.






"சிறிய கொடிகளில் பெரிய பூசணிக்காய்கள் காய்ப்பது போல், சிலரது நம்பிக்கை அவர்களது சக்தியை விட அதிகமாக இழுக்கிறது.

'இமயமலையின் மீது ஏறிவிடலாம்' என ஒருவன் நம்புகிறான், ஏற முயற்சிக்கிறான்.

கால்களில் வலுவில்லை.

கடைசியில் ஒரு குன்றின் மீது நின்று கொண்டு 'இது தான் இமயம்' என்று சாதிக்கிறான்.

சொல்லித் திருத்த முடியாத வாதங்களை ஏற்றுக் கொண்டுவிட்டால் தொல்லை இல்லை என்பதால், மற்றவர்களும் அதை ஒப்புக் கொள்கிறார்கள்.

களிமண்ணால் சிலை செய்யும் சிற்பி, மண்ணாலேயே ஒரு மாளிகை கட்ட முயற்சிக்கிறான்.

காகிதக் கப்பலைக் கடலிலே விடுவேன்; அதை ஓட்டியும் காட்டுவேன்; 'கரையிலும் சேர்ப்பேன்' என்பது ஒருவனின் வாதம்.

இரண்டு காலடிகள் ஒழுங்காகா விழுந்து விட்டதாலேயே, கால்களில் எண்ணையைத் தடவிக் கொண்டு வழுக்குப் பாறைகளில் ஏறுவேன் என்பது இன்னொருவனின் வாதம்.

ஒரு வெற்றி பல வெற்றிகளைக் கனவு காண்கிறது.

ஒரு சக்தி, பல சக்திகள் தனக்கிருப்பதாக நம்பவைக்கிறது.

ஆனால் நம்பிக்கை அளவுக்கு மீறியதாக ஆகும் போது, அழிவும் கேலியும் எதிரே நிற்கின்றன.

கோழிக் குஞ்சைப் பிடித்து விட்ட தைரியத்தில், யானையையும் பிடிக்க ஒருவன் தயாராகிறான்.

கேரம்போர்டில் வெற்றி பெற்றுவிட்ட மயக்கத்தில் கிரிக்கெட் பந்தயத்திற்கு 
ஒருவன் தயாராகிறான்.

போலந்தையும், செக்கோஸ்லோவோகியாவையும் பிடித்த மயக்கத்தில் சோவியத் யூனியனுக்குள் நுழைந்த ஹிட்லரைப் போல்.   

நம்பிக்கை தரும் வெற்றிகளை விடத், தோல்விகள் அதிகம்.

அந்த தோல்விகளும் வெற்றிகளே என்பது இன்னொருவனின் நம்பிக்கை.

நம்பிக்கை என்பது அவனவன் சக்திக்கு ஏற்ப்பவே வைக்க வேண்டும்.

நம்பிக்கை அதிகமாகும் போது அச்சம் அற்றுப் போகிறது.

அச்சம் அற்றுப் போன இடத்தில், 'நான் எது செய்தாலும் சரியே' என்ற ஆணவமும், துணிவும் வருகிறது.

அந்த கர்வம் தோல்வியைக் கூட்டி வருகிறது.

தோல்வி நம்பிக்கையைச் சாகடிக்கிறது.

வெற்றி மயங்கவைத்துத் தோல்வியை இழுத்து வருகிறது; தோல்வி அடக்கத்தைத் தந்து வெற்றியைக் கொண்டு வருகிறது.

மனித மனம், அடிக்குபின் பழைய நிலைக்குத் திரும்புகிறது.

மனிதனது கடைசி மயானம், இதை இன்றுவரை நம்பிக்கையால் வென்றவன்  எவனுமில்லை.

எதிரியின் சக்தி என்ன என்று தெரியும் வரை தான் ஒருவனது நம்பிக்கை. 

ஆணவமும், அதீத நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.

'நான்' என்று நினைக்காதீர்கள், நினைத்தால் ஆண்டவன் 'தான்' என்பதைக் காட்டிவிடுவான்."




-Andrew Lo 









  








0 comments:

Post a Comment