Saturday, June 1, 2013

ஆணவம் , அகந்தை , EGO etc...



இந்த பிரபஞ்சம் என்னும் மகா சமுத்திரத்தில் கோடிக் கணக்கான உயிரினங்களில் மனித இனமும் ஒன்று. அந்தக்  கோடானகோடி மனித இனத்தில் நாமெல்லாம் ஒரு சிறு துளி.

நான் யார்த் தெரியுமா? நான் எப்படி பட்டவன்னு உனக்குக் காட்டுறேண்டா... என்னையே எதுத்து பேசுறியா.... நான் சொல்றது தான் தம்பி சரி... என்கிட்ட வெச்சுக்காத நாங்கெல்லாம் அப்பவே அப்படி .... என்னப் பத்தி உனக்கு இன்னும் சரியாத் தெரியல... என்ன அந்த ஆண்டவனால கூட புரிஞ்சிக்க முடியாதுடா... ( Shhh!!! அப்பா முடியல )

இப்படி சிறு எள் அளவு கூட இல்லாத நாம் இந்த 'நான்' என்ற கர்வம் தொற்றிக் கொண்டவுடன் நான் தான் இந்த உலகம், இந்த உலகம் தான் நான். என்னை மையமாக வைத்துதான் இந்த உலகம் சுழல்கிறது என்று ஏகத்தும் மயக்கத்தில் ஆழ்ந்து எள் அளவு கூட இல்லாத நாம், மலை அளவு நம்மை நாமே கற்பனை செய்து கொண்டு ஆணவத்தினால் அழிவை எளிதில் தேடிக்கொள்கிறோம்.

உண்மையிலே நான் என்ற அகங்காரத்தோடு அலைபவர்களிடத்தில்   சித்தர் ஒரு கேள்வி கேட்கிறார். முடிந்தால் பதில் அளியுங்களேன். 







பாடல் :

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே 
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே 
உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ?

                                                                                    - சிவவாக்கியர் 

பொருள் :

"இன்று நீ பரிபூரணமான  ஓர் உயிரினமாய் உலா வந்து கொண்டிருக்கிறாய். அனால் உன் மூலம் (origin) எங்கிருந்து வந்தது. பத்து மாத காலமாய் ஒரு துளி நீராய் இருக்கின்ற உனக்கு கைகள் இரண்டும், கால்கள் இரண்டும், கண்கள் இரண்டும் இன்ன பல உறுப்புகளும் எங்கிருந்து எப்படித் தோன்றியது.   அப்படியே அது தனித் தனியாகத் தோன்றினாலும் அனைத்திற்கும்  ஒன்றோடு ஒன்று எப்படித் தொடர்பு ஏற்படுகிறது, அப்படியே தொடர்பு ஏற்ப் பட்டாலும் எப்படி அது முழு உடம்பாக வடிவு பெறுகிறது. உயிரின் மூலம் எங்கிருந்து வருகிறது அப்படியே உயிருக்குபின் உடம்பு தோன்றினாலும் அந்த மஹா சக்தியான ஆத்மா அல்லது உயிர் எப்படி உடம்போடு கலக்கின்றது, உன் உடலுக்குள் உயிர் எங்கே ஒளிந்து இருக்கிறது. உயிரினால் உடம்பெடுத்து அலைகின்ற அகங்காரத்தின் அரசரே... பதில் கூறுங்கள் ஐயா."  

உள்ளார்ந்த அர்த்தம் :

அறுபது ஆண்டு காலம் நம்மைச் சுமக்கின்ற இந்த உடம்பின் உருவாக்கத்தையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் படைப்பு பற்றியும் படைத்தவன் பற்றியும் எப்படி நமக்குப் புரியும். நம் சிறு மூளைக்கு எட்டுவதெல்லாம் நம் செயல்கள் பற்றிய பிரமிப்பும்,  ஆணவமும், பெருமிதமும் மட்டுமே. நம் பெருமூளை விரிவடைந்து நம்  பார்வை விசாலமானால் மட்டுமே படைத்தல் பற்றியும் படைத்தவன் பற்றியும் மெதுமெதுவாகப் புரிய வரும் அப்படி புரியும் பொழுது நமக்கெல்லாம் மூலம் அந்த ஆதிமூலம் என்ற உண்மை விளங்கும். மனதின் ஓட்டத்தை இடைவிடாது கவனிக்கும் பிரபஞ்சப் பார்வை என்ற பார்வை தோன்றும். அந்தப் பார்வை இங்கே இறைவனை மையமாக வைத்தே இந்த பிரபஞ்சம் இயங்குகிறது என்ற தெளிவைக் கொண்டு வரும். இறைவன் படைப்பில் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை பின் ஏன் இந்த ஆட்டம்  என்று மனம் இடைவிடாது சிந்தித்து கொண்டே இருக்க கர்வம் அடிபட்டுப்போகும். துறவு என்பது பொருள்களை துறந்து செல்வதல்ல அகந்தையை அழிப்பதே உண்மையான துறவு என்று பட்டினத்தார் வகுத்த பாதையை நோக்கி நம் எண்ணங்களைச் செலுத்துவோம் அமைதியை நோக்கிப் பயணிப்போம்.







இந்தப் பாடலை நான் கடவுள் திரைபடத்தில் இயக்குனர் பாலா அவர்கள் ஒரு காட்சியில் பயன் படுத்தி இருப்பார். 








தத்துவம் 9989:

"இராணுவத்தால அழிஞ்சவானோட  ஆணவத்தால அழிஞ்சவன் தான் இங்கே அதிகம்"

            - வேற யாரு நம்ம "சந்தானம்" 


0 comments:

Post a Comment