பகுதி : 1
மலர்களே, மலர்களே இது என்ன கனவா...
சமிபத்தில் நானும் எனது நண்பன் விவேக்கும் என்னுடைய மடிக்கணினியில் சூர்யா நடித்து வெளி வந்த "பூவெல்லாம் கேட்டுப்பார்" திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அதில் ஒரு காட்சி, நடிகர் சூர்யா அவர்கள் ஜோதிகாவிடம் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிட்டுள்ள 99 மலர்களையும் மூச்சுச் திணற இடைவெளி விடாமல் சொல்லி முடிப்பார்... இயக்குனர் வசந்த் அவர்கள் உண்மையில் அந்த காட்சியை அருமையாக பதிவு செய்து தமிழ் இலக்கியத்தின் பெருமையை நமக்கு தெரிவித்திருப்பார்.
அதைப் பார்த்த உடனே அனைவருக்கும் எழும் அதே கேள்வி தான் எனக்குள்ளும் எழுந்தது.
எப்படி அறிவியல் வளர்ச்சி இல்லாத சங்ககாலகட்டத்தில் உண்மையிலேயே இப்படி ஒரு ஆய்வை நடத்தி அதைப் பாடலாக படைக்க முடியும்.
முன்பே இத்திரைப்படத்தை பல முறை பார்த்திருந்தாலும் அப்பொழுது இணைய தளத்தின் பயன்பாடு என்னிடம் இருந்ததில்லை. இப்பொழுதோ சொடுக்கும் நேரத்தில் உடனுக்குடன் தகவல்கள்.
உடனே அந்த 99 மலர்கள், என்ன என்று அறியும் ஆவலில் இணையத் தேடுதலில் இறங்கினோம். அப்பொழுது ஒரே ஒரு தளம் அனைத்து மலர்களையும் அதன் புகைப்படத்துடன் கூடியதொரு நீண்ட ஆய்வறிக்கையை, அதில் வெளியிட்டிருந்தனர். அது ஒரு அசாதாரணமான முயற்சியாக தோன்றியது. அதை வாழ்த்தும் நோக்கத்துடனும் நான் படித்து பயன் அடைந்ததைப் போன்று நீங்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் உங்களுக்கு இதைப் படித்ததில் பிடித்தது பகுதியில் பகிர்கிறேன்...
இதோ அந்த இணைய தளம்.
http://karkanirka.org/2009/04/23/99tamilflowers_index/
பின் குறிப்பு: அந்த தளத்தில் அத்திரைப்படத்தின் காட்சியும் இடம் பெற்றுள்ளது...
பார்த்தும் படித்தும் பயனடைவீர்.... நன்றி
0 comments:
Post a Comment