Saturday, December 15, 2012

படித்ததில் பிடித்தது,



பகுதி : 2

ஆங்... கதகேளு கதகேளு கருத்தான கதகேளு...



சமிபத்தில் YOU TUBE வலைதளத்தில் விஜய் டிவி புகழ் திரு. கோபிநாத் அவர்களின் ஒரு வீடியோ காட்சியைப் பார்க்க நேர்ந்தது. 

ஒரு கல்லூரியில் மாணவர்களிடம் உரையாடுவது போன்று இருக்கும் அந்தப் பதிவு. அதில் ஒரு மாணவி எழுந்து அவர் முன் ஒரு கேள்வியை வைப்பார், "இன்றைய சூழலில் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் தான் அறிவாளிகள் என்று ஒரு தோற்றம் உருவாகி உள்ளதே அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ?"

அதற்கு அவர் " நானும் ஆரம்பத்தில் சென்னைக்கு வந்த புதிதில் அப்படி நினைத்துக்கொண்டு தான் பலரிடமும் பேசுவதற்கு தயங்கி ஒதுங்கிவிடுவேன். பின்பு தான் காலப்போக்கில் தெரிய வந்தது அனைவருமே ஆங்கிலத்தை அரைகுறையாக தெரிந்து வைத்துக்கொண்டு தவறாகத் தான் பேசுகிறார்கள் என்று.

இறுதியாக இவ்வாறு சொல்லி முடிப்பார் "ஆங்கிலத்தைத்  தவறாக பேசுவதற்கு யாரும் வருத்தப்படவோ வெட்கப்படவோ தேவையில்லை. அந்நிய மொழியை தவறாக பேசுவதற்கு நமக்கு முழு உரிமை இருக்கிறது, ஏன் என்றால் அந்த மொழி நமக்கு அந்நியம்."

"உண்மையில் விவரம் அறிந்தவர்கள் ஆழ்ந்து யோசித்தால் எவன் ஒருவன் பிறந்ததில் இருந்து இறப்பு வரை தனக்குத் துணையாய் வரக்கூடிய தாய் மொழியைத் தவறாகப் பேசுகிறானோ அவன் தான் உண்மையில் கேலிக்கும் வெட்கத்திற்கும்  உள்ளாக வேண்டியவன்... இன்றைய சமூகம் அதை மறந்து விட்டதனால் தான் இப்படி ஒரு மாய தோற்றம், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவாளிகள் என்று." 

இதை எதற்காக மேலே பதிவு செய்திருக்கிறேன் என்றால் இன்றைய கார்ப்பரேட்  உலகில் உலக மயமாக்கலின் தாக்கத்தை விட  ஆங்கில மயமாக்கலின் தாக்கம் தான் மிகப்பெரிய ஆடம்பரத்தின் அறிகுறியாக விளங்குகிறது. 




புத்தக வாசிப்பை மட்டும் இங்கே எடுத்துக்கொள்வோம். ஹேய் யா ! நான் டாமில் புக்ஸ் லாம் படிக்கிறது இல்ல only english novels தான் படிக்குது ன்னு ...  so and so author பேரெல்லாம் சொல்லி அவ் ரோடா books னா  எனக்கு உயிருனு வெட்டி சீன் போடுறதுக்குன்னு  ஒரு கூட்டமே இருக்குது.

எதார்த்தத்தில் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் இந்த மண் சார்ந்த கதைகளும், எழுத்துக்களும் தான் அதிக தாக்கத்தை எற்படுத்தக் கூடும் . 

எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த நூற்றாண்டின் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறந்த 100 சிறுகதைகளைப்  பட்டியலிட்டுத் தொகுத்துள்ளார். அனைவரும் தமிழ் எழுத்துக்களின் ஆளுமையையும் தமிழ்க் கதைகளின் பெருமையையும் உணர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பெரும் முயற்சியைச் செய்துள்ளார் . 

நான் படித்துப் பயன் அடைந்ததைப் போல நீங்களும்  படித்துப் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், இதில் ஏதாவது ஒரு கதை உங்கள் வாழ்க்கைப்  பாதையையும்  உங்கள் சிந்தனையையும் மாற்றும் என்ற நம்பிக்கையிலும்  இதைப் பகிர்கிறேன். 


என்ன சிறு கதை வாழ்கையை மாற்றுமா? என்று தானே கேட்கிறீர்கள் ...  

எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடனின் சிறுகதை, இயக்குனர் பாலாவின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது போல் உங்களுக்கும் அந்த நிகழ்வு நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. 




இதோ அந்த இணைய தளம்... 



இந்திய மொழிகளில் தமிழில் தான் இவ்வளவு மாறுபட்ட சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகின் சிறந்த சிறுகதைகளாக கொண்டாடப்பட வேண்டிய பல கதைகள் தமிழில் வெளியாகி உள்ளன.


                                                            -எஸ். ராமகிருஷ்ணன் 






0 comments:

Post a Comment