வாழ்வியல் சிந்தனைகளை வகுத்துக் கூறும் திருக்குறளில் இல்லாத கருத்துக்களே இல்லை என்று கூறும் அளவிற்கு திருக்குறள் ஒரு அறிவுக்களஞ்சியம், கருத்துக்கடல்.
இன்றைய CORPORATE MANAGEMENT கடைபிடிக்கக் கூடிய SUCCESS MANTRA-வையும் சங்க இலக்கியமாகிய திருக்குறளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணத்தினால் விளைந்த ஒரு சிறு முயற்சி.
AIM HIGH, POSITIVE THINKING
வெள்ளத்து அனைய, மலர் நீட்டம்;-மாந்தர்தம்
உள்ளத்து அனையது, உயர்வு.
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
..........................................................................................................................................................................................
KNOW YOUR LIMITATIONS
நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.
தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.
..........................................................................................................................................................................................
KNOW YOUR STRENGTH
உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
.................................................................................................................................................
HAVE PATIENCE
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.
காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் விரைந்து செய்து முடிக்க வேண்டும்.
.................................................................................................................................................
WISE DECISIONS
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.
கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்.
........................................................................................................................................................................
PROPER PLANNING
அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
முதியமுஞ் சூழ்ந்து செயல்.
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று
விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
..........................................................................................................................................................................................
BELIEVE IN YOURSELF
அருமை யுடைத்தென் றசாவாமைவேண்டும்
பெருமை முயற்சி தரும்.
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற
நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமைந்து வெற்றிக்கு வழி வகுக்கும் .
..........................................................................................................................................................................................
HARDWORK AND DEDICATION
தெய்வத்தான் ஆகாதுஎனினும், முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்.
கடவுளே என்று கூவி அழைத்தும் கூட நடக்காத காரியம் ஒருவர்
முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
..........................................................................................................................................................................................
OBSTACLE INTO AN OPPORTUNITY
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், செயலுக்கு இடையூறாக வரும் தடையையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
..........................................................................................................................................................................................
KNOWLEDGE SHARING
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அதைப் போன்று தனக்கு கிடைத்த மேன்மை தரக்கூடியவற்றைப் பகிரும் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் என்றும் உயர்வு உண்டு.
..........................................................................................................................................................................................
திருக்குறள் வாழ்க்கையின் திறவுகோல்
ReplyDelete