Sunday, September 15, 2013

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்...




Movie:Kadal
Poet: Vairamuthu
Music: A.R.Rahman
Director:Maniratnam

....................................................................

தத்துவார்த்த ரீதியாக வாழ்வியல் சிந்தனைகளையும், சுயமுன்னேற்ற வரிகளையும் அமையப்பெற்ற பாடல்களின் சாரம்சத்தை நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள இயலாது. 

அமைதியான சூழலிலும், தக்க மனநிலையிலும் கேட்கும் பொழுது மட்டுமே அதன் கருத்துக்கள் நம் மனதில் ஒரு வீரியத்தையும், ஆழமான தாக்கத்தையும் விதைக்கும். அந்த விதை மரமாய் வளர்ந்து நம் மனம் தளர்வடையும் பொழுதெல்லாம் நிழல் தந்து, சக்தியூட்டி மீண்டும் நம் பயணத்தை புதிய உற்சாகத்துடன் தொடர வழிவகை செய்யும்.

அப்படிப்பட்ட ஒரு விதை தான் இந்தப் பாடல். தோல்வி,  விரக்தி, வெறுமை, தனிமை போன்ற சந்தர்ப்பங்களால் காயப்பட்ட நம் மனதை மயிலிறகால் வருடும் வைரமுத்துவின் வரிகள்.  







சித்திரை நிலா, ஒரே நிலா
பரந்த வானம் படச்ச கடவுளு,
எல்லாமே ஒத்தையில நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்குரடே,

எட்டு வை மக்கா
எட்டு வெச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா...

மனிதன் நினைத்தால் வழி  பிறக்கும்
மனதில் இருந்தே ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால் தான்
பூமியும் கூட தாள் திறக்கும்

எட்டு வை மக்கா
எட்டு வெச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா...

கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்
களங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்

சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும் 
தொனிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்


சித்திரை நிலா, ஒரே நிலா
பரந்த வானம் படச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்குரடே

எட்டு வை மக்கா
எட்டு வெச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா

மரம் ஒன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்.
மனம் இன்று விழுந்தால்,
யார் சொல்லி நடக்கும்.

பூமியைத் திறந்தால் 
புதையலும் இருக்கும் 
பூக்களைத் திறந்தால் 
தேன்துளி இருக்கும் 

நதிகளைத் திறந்தால் 
கழனிகள் செழிக்கும் 
நாளையைத் திறந்தால் 
நம்பிக்கை சிரிக்கும் 

நாளையைத் திறந்தால் 
நம்பிக்கை சிரிக்கும்... 












2 comments:

  1. நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள்.

    ReplyDelete
  2. Nanum indha songa rasichu ketruken. But ivlo aalndhu ketadhu illa. sema lines bro...Thanks for the post

    ReplyDelete