Sunday, September 15, 2013

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்...




Movie:Kadal
Poet: Vairamuthu
Music: A.R.Rahman
Director:Maniratnam

....................................................................

தத்துவார்த்த ரீதியாக வாழ்வியல் சிந்தனைகளையும், சுயமுன்னேற்ற வரிகளையும் அமையப்பெற்ற பாடல்களின் சாரம்சத்தை நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள இயலாது. 

அமைதியான சூழலிலும், தக்க மனநிலையிலும் கேட்கும் பொழுது மட்டுமே அதன் கருத்துக்கள் நம் மனதில் ஒரு வீரியத்தையும், ஆழமான தாக்கத்தையும் விதைக்கும். அந்த விதை மரமாய் வளர்ந்து நம் மனம் தளர்வடையும் பொழுதெல்லாம் நிழல் தந்து, சக்தியூட்டி மீண்டும் நம் பயணத்தை புதிய உற்சாகத்துடன் தொடர வழிவகை செய்யும்.

அப்படிப்பட்ட ஒரு விதை தான் இந்தப் பாடல். தோல்வி,  விரக்தி, வெறுமை, தனிமை போன்ற சந்தர்ப்பங்களால் காயப்பட்ட நம் மனதை மயிலிறகால் வருடும் வைரமுத்துவின் வரிகள்.  





Thursday, August 15, 2013

THIRUKURAL vs CORPORATE SUCCESS MANTRAs






வாழ்வியல் சிந்தனைகளை வகுத்துக் கூறும் திருக்குறளில்  இல்லாத கருத்துக்களே இல்லை என்று கூறும் அளவிற்கு திருக்குறள் ஒரு அறிவுக்களஞ்சியம், கருத்துக்கடல்.


இன்றைய CORPORATE MANAGEMENT கடைபிடிக்கக் கூடிய SUCCESS MANTRA-வையும் சங்க இலக்கியமாகிய திருக்குறளையும் ஒப்பிட்டுப்  பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணத்தினால் விளைந்த ஒரு சிறு முயற்சி. 

Saturday, July 20, 2013

How winning is done!



Rocky Balboa’s Inspirational Speech To His Son






[Son]

I know that’s not what I wanna do, but that’s just the way that it is. Don’t you care what people think? Doesn’t bother you that people…are making you out to be joke and that I’ll be included in that? Do you think that’s right? Do you?

[Father] 

You ain’t gonna believe this, but you used to fit right here.

I’d hold you up to say to your mother, “This kid’s gonna be the best kid in the world. This kid’s gonna be somebody better than anybody I ever knew.” 

And you grew up good and wonderful. It was great just watching you, every day was like a privilege. Then the time come for you to be your own man and take on the world, and you did. But somewhere along the line, you changed. 

You stopped being you. You let people stick a finger in your face and tell you you’re no good. And when things got hard, you started looking for something to blame, like a big shadow.

Let me tell you something you already know. 

The world ain’t all sunshine and rainbows. It’s a very mean and nasty place and I don’t care how tough you are it will beat you to your knees and keep you there permanently if you let it. You, me, or nobody is gonna hit as hard as life. But it ain’t about how hard ya hit. It’s about how hard you can get hit and keep moving forward. How much you can take and keep moving forward. That’s how winning is done! 

Now if you know what you’re worth then go out and get what you’re worth. But you gotta be willing to take the hits, and not pointing fingers saying you ain’t what you wanna be because of him, or her, or anybody! 

Cowards do that and that ain’t you! You’re better than that!

I’m always gonna love you no matter what. No matter what happens. You’re my son and you’re my blood. You’re the best thing in my life. 

But until you start believing in yourself, you are not gonna have a life. 



Saturday, June 29, 2013

காலமே என்னைக் காப்பாற்று...



கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து...  




காலமே என்னைக் காப்பாற்று


அதிகாலைக்கனவு கலைக்கும்
அலாரத்திடமிருந்தும் -

நித்தம் நித்தம்
ரத்தத்தில் அச்சேறிவரும்
பத்திரிக்கைச் செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் -

தென்னைமரத்தில்
அணிலை வேடிக்கை பார்க்கும்
குழந்தையை  நிமிஷத்தில்
அலற வைக்கும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் -

ஒளிமயமான கற்பனை உதிக்கும் வேளை
தலைமறைவாகித் தொலைக்கும் பேனாவிலிருந்தும் -

விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி
முனிவன்போல் புலனடக்கித்
தும்பிபிடிக்குமொரு பொற்பொழுதில்
தொழிலைக் கெடுக்கும் தும்மலிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று


**************************************************************

ஒரே ஒரு புத்தகம்படித்த
'அறிவாளி'யிடமிருந்தும் -

சிநேகிக்கும் பெரியவர்களின்
சிகரெட் புகையிலிருந்தும் -

எல்லாரும் கதறியழ
எனக்குமட்டும் கண்ணீர்வராத
இழவு வீட்டிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று


**************************************************************


பயணியர்விடுதிக்
கொசுவிடமிருந்தும் -

முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை
உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்
உலோபியிடமிருந்தும் -

கை கழுவ அமர்ந்த
சாப்பாட்டு மேஜையில்
கைகுலுக்க வரும்
கைகளிலிருந்தும்...

நோயுற்ற காலை
தனிமையிலிருந்தும்-

நோய்கள் வந்தபின்
மருந்திடமிருந்தும் -

மருந்து தீர்ந்தபின்
நோயிடமிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று


**************************************************************


எனதுபக்கம் நியாயமிருந்தும்
சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -

வருமானம் எல்லாம் தீரும் வயதில்
வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -

என்னைப் பகையாய் எண்ணும் வாசலில்
பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -

இல்லையென்றொருவன்
தவிக்கும்பொழுதில்
இல்லையென்று நான்
தவிர்ப்பதிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று


**************************************************************

 
சக ரயில் பயணியின்
அரட்டையிலிருந்தும்
அரட்டை முடிந்ததும்
குறட்டையிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று


**************************************************************


தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்

என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே

காலமே
என்னைக்
காப்பாற்று



                       
            -வைரமுத்து 

                                                                           


**************************************************************


Saturday, June 22, 2013

போர்த் தொழில் பழகு







"வரலாறு என்பது வருடங்களை நினைவில் வைத்துக் கொள்வதற்காக அல்ல. நிகழ்வுகளை வருடிக் கொடுத்து வாழ்க்கையை வரவு வைத்துக் கொள்வதற்காக. சரித்திரம் திரும்ப நிகழ்வதில்லை. சம்பவங்கள் தான் வெவ்வேறு நபர்களால் மீண்டும் அரங்கேறுகின்றன. இன்றைய இளைஞர்கள் படிப்பை கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு மற்றவற்றை நழுவவிட்டு விடுகிறார்கள்.


'போர் வேண்டாம்' என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் 'போர்க்குணம்' எப்போதும் தேவை. இன்றைய வாழ்வு சூழ்ச்சிகள் நிறைந்த போர்க்களம்.


சிலரது வெடிச் சிரிப்பிற்குப் பின்னால் வெடிகுண்டுகள் ஒளிந்திருக்கும். சிலரது பணிவிற்குப் பின்னால் சதி வேலைகள் மறைந்திருக்கும். தந்திரங்களைத் தெரிந்து கொள்வது அவற்றைக் கையாளுவதற்கல்ல. மற்றவர்கள் கையாளும் போது அவற்றை கையாடுவதற்காக.


இன்று போட்டித் தேர்வும் போருக்கு ஒப்பானது வர்த்கக் களமும் பந்தயக் களமே! உத்திகள் வகுப்போரே வெற்றிகள் குவிப்பார். வியூகங்கள் வகுப்போரே சோகங்கள் தவிர்ப்பார்."


                                                                                                       -வெ. இறையன்பு







"போர்த் தொழில் பழகு" வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான, அனைவராலும் கொண்டாடப் பட வேண்டிய வியத்தகு படைப்பு. நாற்பது வாரங்கள் போரையும், வெற்றிவாகை சூடிய மன்னர்கள் கடைப்பித்த போர் நுணுக்கங்களையும், அவற்றை இன்றைய போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்த வாழ்வுடன் தொடர்புபடுத்தி புதிய தலைமுறையில் எழுதி வந்தார். இளைஞர்களுக்கு சக்தியூடிக் கொண்டிருந்த தொடர்  இப்போது நூலாக கோர்க்கப்பட்டு புதிய தலைமுறை வெளியிட்டு உள்ளது.

சமூகத்தை நாம் எவர் துணையும் இன்றி நேரடியாக எதிர் கொள்ளும் வரை POLITICS என்ற விஷயம், அரசியல் சம்மந்தப்பட்ட ஒன்று என்று நாம்
நினைத்தது அனைத்தும் தவிடு பொடியாகின. இன்றைய CORPORATE யுகம் நம்மை அறியாமலே நம்மை அதில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது . அதைக் கையாளத் தேவையான  தெளிந்த அறிவு நம்மிடையே இல்லாத காரணத்தினால் அதை எதிர் கொள்ள முடியாமல் நிலைகுலைந்து விடுகிறோம். அன்றைய மன்னர்கள் கையாண்ட போர் முறைகள்  அனைத்தும் அறிவு என்னும் ஆயுதத்தைக் கொண்டே நடத்தப்பட்டுள்ளன.

அவற்றை இறையன்பு அவர்கள் பல உண்மை நிகழ்வுகளுடன் சுவையான சரித்திரக் குறிப்புகளுடன் பதுங்கிப் பாய், வலையை விரி, கவனத்தை திசை திருப்பு, பலவீனத்தைப் பந்தாடு, எதிரியாய் மாறு, முதலில் முஷ்டியை உயர்த்து, சாமுராய் யாய் இரு, புயலெனப் புறப்படு, எதிரியை களைப்படைய செய்...  இது போன்று மொத்தம் இருபத்தி மூன்று போர் உத்திகளை விளக்கி அதை எப்படி, எப்பொழுது, யாருக்கெதிராய் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார். இன்றைய சூழலில் அனைவரும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு புத்தகம்.









"போர்த் தொழில் பழகு வாசித்தபிறகு இன்றைய இளைஞர்கள்

பாரதி போல் வீரமும்,
பகத்சிங் போல் துணிவும்,
வாஞ்சி போல் வைராக்கியமும்,
சிவா போல் சீற்றமும்,
சிவாஜி போல் தலைமையும்,
அக்பர் போல் வலிமையையும்,
பாபர் போல் பலமும்,
ராஜேந்திர சோழன் போல் அனைத்தும் பெற்று தன்னம்பிகையுடன் திகழ வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்"

                                                  
                                                                                          -வெ. இறையன்பு 

Saturday, June 8, 2013

என்ன இல்லை உன்னோடு! ஏக்கம் என்ன கண்ணோடு!






Movie:7am arivu
Poet:Pa.Vijay
Music:Harris jeyaraj
Director:A.R.Murugadoss

...................................................................


தமிழ் சினிமா பாடல் வரலாற்றில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் இது. சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ENERGY TONIC ஆக சக்தியூட்டக் கூடிய எழுச்சி  மிக்க வரிகள். தன்னுடைய கனவை நிஜமாக்கப் போராடும் ஒவ்வொரு தனி மனிதனும்  தோல்வியால் துவண்டு போகும் பொழுது  இதை ஒரு முறை கேட்டால் போதும் துணிவுடன் கூடிய தன்னம்பிக்கை நிச்சயம் வரும்... வரவேண்டும். 






பா.விஜயின் எழுச்சி மிக்க வரிகளில் இதோ அந்தப் பாடல் 





இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!


என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!


இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா,  எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பலர் கைகளில் சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?


நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே மனம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்தப் பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?


இதோ இதோ இணைந்ததோ 
இனம் இனம் நம் கையயோடு
அதோ அதோ தெரிந்ததோ 
இடம் இடம் நம் கையோடு 


யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!


என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! எழுவோம்!


இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!







Saturday, June 1, 2013

ஆணவம் , அகந்தை , EGO etc...



இந்த பிரபஞ்சம் என்னும் மகா சமுத்திரத்தில் கோடிக் கணக்கான உயிரினங்களில் மனித இனமும் ஒன்று. அந்தக்  கோடானகோடி மனித இனத்தில் நாமெல்லாம் ஒரு சிறு துளி.

நான் யார்த் தெரியுமா? நான் எப்படி பட்டவன்னு உனக்குக் காட்டுறேண்டா... என்னையே எதுத்து பேசுறியா.... நான் சொல்றது தான் தம்பி சரி... என்கிட்ட வெச்சுக்காத நாங்கெல்லாம் அப்பவே அப்படி .... என்னப் பத்தி உனக்கு இன்னும் சரியாத் தெரியல... என்ன அந்த ஆண்டவனால கூட புரிஞ்சிக்க முடியாதுடா... ( Shhh!!! அப்பா முடியல )

இப்படி சிறு எள் அளவு கூட இல்லாத நாம் இந்த 'நான்' என்ற கர்வம் தொற்றிக் கொண்டவுடன் நான் தான் இந்த உலகம், இந்த உலகம் தான் நான். என்னை மையமாக வைத்துதான் இந்த உலகம் சுழல்கிறது என்று ஏகத்தும் மயக்கத்தில் ஆழ்ந்து எள் அளவு கூட இல்லாத நாம், மலை அளவு நம்மை நாமே கற்பனை செய்து கொண்டு ஆணவத்தினால் அழிவை எளிதில் தேடிக்கொள்கிறோம்.

உண்மையிலே நான் என்ற அகங்காரத்தோடு அலைபவர்களிடத்தில்   சித்தர் ஒரு கேள்வி கேட்கிறார். முடிந்தால் பதில் அளியுங்களேன். 







பாடல் :

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே 
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே 
உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ?

                                                                                    - சிவவாக்கியர் 

பொருள் :

"இன்று நீ பரிபூரணமான  ஓர் உயிரினமாய் உலா வந்து கொண்டிருக்கிறாய். அனால் உன் மூலம் (origin) எங்கிருந்து வந்தது. பத்து மாத காலமாய் ஒரு துளி நீராய் இருக்கின்ற உனக்கு கைகள் இரண்டும், கால்கள் இரண்டும், கண்கள் இரண்டும் இன்ன பல உறுப்புகளும் எங்கிருந்து எப்படித் தோன்றியது.   அப்படியே அது தனித் தனியாகத் தோன்றினாலும் அனைத்திற்கும்  ஒன்றோடு ஒன்று எப்படித் தொடர்பு ஏற்படுகிறது, அப்படியே தொடர்பு ஏற்ப் பட்டாலும் எப்படி அது முழு உடம்பாக வடிவு பெறுகிறது. உயிரின் மூலம் எங்கிருந்து வருகிறது அப்படியே உயிருக்குபின் உடம்பு தோன்றினாலும் அந்த மஹா சக்தியான ஆத்மா அல்லது உயிர் எப்படி உடம்போடு கலக்கின்றது, உன் உடலுக்குள் உயிர் எங்கே ஒளிந்து இருக்கிறது. உயிரினால் உடம்பெடுத்து அலைகின்ற அகங்காரத்தின் அரசரே... பதில் கூறுங்கள் ஐயா."  

உள்ளார்ந்த அர்த்தம் :

அறுபது ஆண்டு காலம் நம்மைச் சுமக்கின்ற இந்த உடம்பின் உருவாக்கத்தையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் படைப்பு பற்றியும் படைத்தவன் பற்றியும் எப்படி நமக்குப் புரியும். நம் சிறு மூளைக்கு எட்டுவதெல்லாம் நம் செயல்கள் பற்றிய பிரமிப்பும்,  ஆணவமும், பெருமிதமும் மட்டுமே. நம் பெருமூளை விரிவடைந்து நம்  பார்வை விசாலமானால் மட்டுமே படைத்தல் பற்றியும் படைத்தவன் பற்றியும் மெதுமெதுவாகப் புரிய வரும் அப்படி புரியும் பொழுது நமக்கெல்லாம் மூலம் அந்த ஆதிமூலம் என்ற உண்மை விளங்கும். மனதின் ஓட்டத்தை இடைவிடாது கவனிக்கும் பிரபஞ்சப் பார்வை என்ற பார்வை தோன்றும். அந்தப் பார்வை இங்கே இறைவனை மையமாக வைத்தே இந்த பிரபஞ்சம் இயங்குகிறது என்ற தெளிவைக் கொண்டு வரும். இறைவன் படைப்பில் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை பின் ஏன் இந்த ஆட்டம்  என்று மனம் இடைவிடாது சிந்தித்து கொண்டே இருக்க கர்வம் அடிபட்டுப்போகும். துறவு என்பது பொருள்களை துறந்து செல்வதல்ல அகந்தையை அழிப்பதே உண்மையான துறவு என்று பட்டினத்தார் வகுத்த பாதையை நோக்கி நம் எண்ணங்களைச் செலுத்துவோம் அமைதியை நோக்கிப் பயணிப்போம்.







இந்தப் பாடலை நான் கடவுள் திரைபடத்தில் இயக்குனர் பாலா அவர்கள் ஒரு காட்சியில் பயன் படுத்தி இருப்பார். 








தத்துவம் 9989:

"இராணுவத்தால அழிஞ்சவானோட  ஆணவத்தால அழிஞ்சவன் தான் இங்கே அதிகம்"

            - வேற யாரு நம்ம "சந்தானம்" 


Saturday, May 25, 2013

GOLD RUSH


In 1849, one word sent thousands of people scrambling on a dangerous journey to California: GOLD! A worker at John Sutter’s sawmill in California’s Sacramento Valley discovered gold there in January 1848. The word spread across the country like wildfire. The news flew to faraway China and Europe. The gold rush was on!





HOW PEOPLE GOT TO CALIFORNIA

The journey west to California wasn’t easy in those days. Many Forty-Niners, as the gold seekers were called, traveled by boat. Some sailed around the tip of South America (called Cape Horn) and up to California. A large number of ships sank on this dangerous voyage. Others sailed to Panama, traveled on land to Panama City, and then hopped on another boat to San Francisco.






But most people walked or rode on horseback several thousand miles to the California gold fields. Gold seekers followed such routes as the Oregon Trail and the Mormon Trail across the Great Plains. People faced harsh conditions: burning heat, rain and snow, lack of water, and steep mountains to cross. Cholera and other diseases killed thousands of Forty-Niners before they ever reached California.

People braved these hazards because they dreamed of striking it rich. The promise of gold lured over 200,000 people to California in just a few years.

HOW THE FORTY-NINERS FOUND GOLD

Word of the Gold Rush spread slowly at first. The earliest gold-seekers were people who lived near California or people who heard the news from ships on the fastest sailing routes from California. The first large group of Americans to arrive were several thousand Oregonians who came down the Siskiyou Trail Next came people from the Sandwich Islands, and several thousand Latin Americans, including people from Mexico, from Peru and from as far away as Chile, both by ship and overland. 

By the end of 1848, some 6,000 Argonauts had come to California.Only a small number (probably fewer than 500) travelled overland from the United States that year. 

Some of these "forty-eighters", as the earliest gold-seekers were sometimes called, were able to collect large amounts of easily accessible gold—in some cases, thousands of dollars worth each day.





Even ordinary prospectors averaged daily gold finds worth 10 to 15 times the daily wage of a laborer on the East Coast. A person could work for six months in the goldfields and find the equivalent of six years' wages back home. Some hoped to get rich quick and return home, and others wished to start businesses in California

Most Forty-Niners were men. They crowded into muddy mining camps, sleeping in flimsy shacks or tents.

Miners spent their days digging for gold. In the early days of the gold rush, a man could pocket $300 or $400 in gold before supper—a fortune at the time! Miners also panned for gold in streams and rivers, gathering dirt and rock in metal pans. Water washed away the dirt and left the heavier gold in the pan.

Not everyone found gold. In fact, most people’s dreams of quick riches never came true. In 1851, mining began shifting into a business run by companies.



HOW THE GOLD RUSH CHANGED AMERICA

Gold fever brought a huge wave of people into the West. New Western settlements sprang up almost overnight. Some became abandoned ghost towns after the gold rush, but others survived. These early settlers helped California grow in its first years of statehood. 




The gold rush also pumped billions of dollars into the United States economy. This money helped build railroads and factories, establishing America as a nation of industry.

Saturday, May 18, 2013

நெஞ்சு பொறுக்கு திலையே...


இந்தப் பாடலை படித்த பின்பு பாரதி ஒரு கவிஞன் என்பதைத் தாண்டி அவர் ஒரு தீர்கதரிசி என்பது மிகத்  தெளிவாக விளங்கும். பாரத ஜனங்களின் தற்கால நிலைமை என்று தலைப்பு வைத்திருந்தாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருப்பது தான் இந்தப்  பாடலின் சிறப்பு. இவர்கள் மனப்போக்கை  என்றுமே மாற்ற முடியாது, அவர்களாகவும் மாறமாட்டார்கள்  என்று எதிர்காலத்தை துல்லியமாக கணித்தே இந்த பாடலை இயற்றியிருக்க கூடும்.







பாரத ஜனங்களின் தற்கால நிலைமை 



1.நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
      நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
      அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
      மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்
      துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்.
(நெஞ்சு)

2.

மந்திர வாதி என்பார்-சொன்ன
      மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங்கள்-இன்னும்
      எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே-ஜனம்
      தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசியலை-இவர்
      அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார்
(நெஞ்சு)

3.

சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச்
      சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு
      தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்;
அப்பால் எவனோ செல்வான்-அவன்
      ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்;
எப்போதும் கைகட்டு வார்-இவர்
      யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்
(நெஞ்சு)

4.

நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
      நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்?-ஒரு
      கோடிஎன்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான் அப்பன்
      ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு
      நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
(நெஞ்சு)

5.

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
      சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும்-ஒரு
      கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
      சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;
ஆத்திரங்கொண் டே இவன் சைவன்-இவன்
      அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார்.
(நெஞ்சு)

6.

நெஞ்சு பொறுக்கு திலையே-இதை
      நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே
கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்
      காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்.
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
      பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிக்கின்றாரே-இவர்
      துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
(நெஞ்சு)

7.

எண்ணிலா நோயுடையார்-இவர்
      எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல்-பிறர்
      காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள்-பத்து
      நாலாயிரங் கோடிநயந்துநின் ற
புண்ணிய நாட்டினிலே-இவர்
      பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் !!!